செய்திகள்

தங்கம் விலை இன்றும் சவரனுக்கு ரூ.288 சரிவு

சென்னை, மார்ச் 5–

சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.34 ஆயிரத்துக்கும் கீழ் இறங்கியுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது. இதன்தொடா்ச்சியாக, சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.288 குறைந்து, ரூ.33,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.36 குறைந்து, ரூ.4,181 ஆக உள்ளது.

வெள்ளியும் கிராமுக்கு 60 பைசா குறைந்து, ரூ.69.80 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 குறைந்து, ரூ.69,800 ஆகவும் விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *