செய்திகள்

தங்கம் ஒரு சவரன் விலை ரூ.35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது

சென்னை, பிப். 19–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.34 ஆயிரத்துக்கு கீழ் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.

இதன் தொடா்ச்சியாக சென்னையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.360 குறைந்து, ரூ.34,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.45 குறைந்து, ரூ.4,340 ஆக உள்ளது. அதேநேரத்தில் வெள்ளி விலையும் சற்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.70 குறைந்து, ரூ.72.30 ஆகவும் விற்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *