செய்திகள்

தொடர்ந்து 5 நாளாக விலை குறையும் தங்கம்: இன்று சவரனுக்கு ரூ.296‌ குறைந்தது

சென்னை, நவ. 27-

தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.296 குறைந்தது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்தது. மேலும் இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் இன்று வரை தொடர்ந்து 5 நாளாக விலை குறைந்துள்ளது. இந்நிலையில் நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 ரூபாய் உயர்ந்த‌ நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.296 குறைந்தது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4576 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ.4613 இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.37 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ.36,904-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று ரூ.296 குறைந்து ரூ.36,608-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ.64.80 விற்பனை ஆன நிலையில் இன்று ரூ.0.40 குறைந்து ரூ.64.40–க்கு விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம், வெள்ளியின் விலை நான்காவது நாளாக குறைந்ததால் பொதுமக்கள் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *