செய்திகள்

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம்: சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு

சென்னை, மார்ச் 6–

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, இன்று சவரனுக்கு ரூ.256 அதிகரித்து ரூ.33,728 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தென்னிந்தியாவில் அதிகமாக தங்கம் வாங்கும் மாநிலத்தில் தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது என்பது அனைவருமே அறிந்த ஒன்றுதான். பிப்ரவரி மாதம் முழுவதும் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருந்ததால் நகை வாங்குவோர் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாவே குறைந்து வந்ததால், மக்கள் உற்சாகமாக தங்கத்தை வாங்கி வந்தனர்.

ஆனால் இன்று மீண்டும் தங்கம் விலை திடீரென உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.32 உயர்ந்து ரூ.4,216 க்கு விற்பனையாகிறது. அதன்படி, 22 கேரட் ஆபரண தங்கம் விலை, சவரனுக்கு ரூ.256 உயர்ந்து ரூ.33,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ. 20 காசுகள் உயர்ந்து ரூ.70.10 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிலோ ரூ. 70,100 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *