செய்திகள்

சென்னையில் தங்கம் விலை ஒரேநாளில் ரூ.560 உயர்வு

சென்னை, பிப். 9–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு திடீரென ரூ. 560 உயர்ந்து ரூ. 36,280 க்கு விற்பனையாகிறது.

கடந்த வாரத்தில் சவரனுக்கு ரூ.1600 வரையில் தங்கம் விலை குறைந்தது. அதேபோல், வாரத்தின் முதல்நாளான நேற்றைய தினமும் தங்கம் விலை சரிவுடனே தொடங்கியது. சென்னையில், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.11 குறைந்து ரூ.4,469க்கு விற்பனையானது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.88 குறைந்து ரூ.35,664 க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ஒரு கிராம் வெள்ளியின் விலை கிராமுக்கு 30 காசு குறைந்து ரூ.73.10 க்கு விற்பனை செய்யப்பட்டது.

கிடுகிடு விலை ஏற்றம்

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 560 வரையில் கிடுகிடு விலை ஏற்றம் ஏற்பட்டது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.70 உயர்ந்து ரூ.4,535-க்கு விற்பனையாகிறது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.36,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.60 உயர்ந்து ரூ.75.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *