செய்திகள்

காரில் கடத்திய தங்கம், லேப்–டாப் வெளிநாட்டு மதுபானங்கள் பறிமுதல்: 3 பேர் கைது

Spread the love

சென்னை, நவ. 16–

சென்னையில் போலீசார் நடத்திய வாகன சோதனையில் காரில் கடத்தப்பட்ட 140 கிராம் தங்கம், லேப்டாப், வெளிநாட்டு சிகரெட்டுக்கள், மதுபானங்களை பறிமுதல் செய்த போலீசார் 3 பேரை கைது செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் காரில் தங்கம் கடத்திவரப்படுவதாக திருவல்லிக்கேணி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. திருவல்லிக்கேணி காவல் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜன், ஏட்டு சன்னிலாய்டு ஆகியோர் தலைமையிலான போலீசார் நள்ளிரவு 1.30 மணியளவில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த டிஎன் 07 பிவி 9441 என்ற பதிவெண் கொண்ட டாடா இன்டிகா காரை மடக்கி சோதனையிட்டனர். அந்த காருக்குள் 24 லேப்டாப், வெளிநாட்டு மதுபானங்கள் 11 பாட்டில்கள், 140 கிராம் தங்கம் மற்றும் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுக்கள் ஆகியவை இருந்தன. அவை வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்டு கள்ள மார்க்கெட்டில் விற்பதற்காக கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து காரில் வந்த நாசர், நாசிர், அனிஷ் அஹ்மது ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *