செய்திகள்

ஸ்டாலின் கூறும் நகை, கல்வி கடன்களை அண்ணா திமுக அரசு தான் தள்ளுபடி செய்யும்

விழுப்புரம் ஜன.20–

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறி வரும் நகை மற்றும் கல்வி கடன்களை அண்ணா தி.மு.க. அரசு தான் தள்ளுபடி செய்யும் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்ட அண்ணா திமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 104–வது பிறந்தநாள் விழா பொது கூட்டம் விழுப்புரம் மந்தக்கரையில் நடைப்பெற்றது. இதற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகர செயலாளர் பாஸ்கரன், தலைமை கழக பேச்சாளர்கள் நடிகர் போளூர் ஜெய கோவிந்தன், தலைமை கழக பேச்சாளர்கள் ஆறுமுகம் யூசப், சட்டமன்ற உறுப்பினர்கள் சக்கரபாணி, முத்தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மேலும் இதில் மாவட்ட நிர்வாகிகள் பசுபதி, ராஜேந்திரன், முகமது ஷெரீப், முரளி ரகுராமன், வெங்கடேசன், பாலகிருஷ்ணன், ஒன்றிய செயலாளர்கள் பேட்டைமுருகன், சுரேஷ்பாபு, ராமதாஸ், கண்ணன், ராஜா உள்ளிட்ட மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட செயலாளரும், அமைச்சருமான சி.வி.சண்முகம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–

வருவோர்கள் எல்லாம் எம்.ஜி.ஆர் ஆட்சியை கொண்டு வருவோம் என சொல்லிக்கொண்டு வருகின்றனர். எதிர்கட்சிகள் கூட எம்.ஜி.ஆர் பெயரை கூறினால் தான் பிழைப்பு நடத்த முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதம் தேர்தல் தேதி அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

சிலர் இரட்டை இலை சின்னத்தை முடக்க நினைப்பதாகவும், வர இருக்கிற தேர்தலில் அண்ணா தி.மு.க. மிக பெரிய வெற்றி பெற வேண்டும். எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் கொண்டு வர இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அதுபோல கருணாநிதி ஆட்சியை கொண்டு வருவோம் என ஸ்டாலின் கேட்க தயாரா என ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பிய அமைச்சர், மே மாதத்திற்கு பிறகு தி.மு.க. என்ற கட்சியே இருக்காது.

தி.மு.க. ஒரு தீய சக்தி, அதனை அழிக்க தான் அண்ணா திமுக தொடங்கப்பட்டது. கருணாநிதியின் திமுக ஆட்சியையும், 10 ஆண்டு கால அண்ணா திமுக ஆட்சியையும் ,மக்கள் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். திமுக ஆட்சியில் கட்டபஞ்சாயத்து, ரவுடிசம், கொலை ஆகியவைகள் தான் நடந்தன. இதனை வியாபாரிகள் சிந்திக்க வேண்டும். மேலும் 10 ஆண்டு காலத்தில் ரவுடிகள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுத்த ஆட்சி அண்ணா திமுக ஆகும்.

கருணாநிதி ஆட்சியை கொண்டு வர ஸ்டாலினுக்கே அசிங்கமாக அச்சமாக உள்ளதாகவும், திமுக தலைவர் ஸ்டாலின் கூறி வரும் நகை மற்றும் கல்வி கடன்களை அண்ணா திமுக அரசு தான் தள்ளுபடி செய்யும். மேலும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று சென்றவர்கள் நகை கடன்கள் தள்ளுபடி பற்றி பேசினார்களா. திமுக ஆட்சிக்கு வர போகிறதில்லை.

மக்களுக்காக முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமி அனைத்தையும் செய்வார், நீட்டிற்கு விலக்கு பெற்று தந்தவர் அம்மா என்றும், தமிழ்நாட்டு மாணவர்கள் மீது ஸ்டாலினுக்கு அக்கறை இல்லை என்றும், அரசியல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தான் ஸ்டாலினுக்கு உள்ளது.

7.5 சதவீத இட ஒதுக்கீடு மூலம் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவி செய்த அரசு அண்ணா திமுக அரசு. இரவோடு இரவாக இந்தியாவிலேயே கவர்னர் ஒப்புதல் இல்லாமல் முதல் சட்டம் 7.5 இட ஒதுக்கீடு தான். சோனியா காந்தியின் காலை பிடித்து பிழைப்பு நடத்தியவர்கள் தி.மு.க.வினர். அண்ணா திமுகவை பற்றி பேச திமுகவினர்க்கு எந்த தகுதியும் இல்லை.

7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கு பிறகு 430 மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இவை நீட் இருக்கும் வரை தான் இந்த சிறப்பு சட்டம் இருக்கும், இது கூட தெரியாமல் ஸடாலின் பேசி வருகிறார், என்ன பேசுகிறோம் என தெரியாமல் கவர்ச்சியாக பேசி ஆட்சிக்கு வர முயற்சிக்கிறார் ஸ்டாலின், 2 ஏக்கர் நிலம் கொடுக்கப்படும் என்ற திட்டத்தை இதுவரை திமுகவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏழை மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி கவர்ச்சி திட்டங்களை அறிவித்து ஆட்சிக்கு வர துடிக்கிறார் ஸ்டாலின், தவறான கவர்ச்சியான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வர வேண்டும் என்று திமுக நினைப்பதாகவும், பதவிக்காக பாடுபடுகிறவர்கள் அல்ல அண்ணா திமுகவினர். மக்களுக்காக பாடுபடுகிற இயக்கம் அண்ணா தி.மு.க. குடும்பத்திற்காக ஆட்சி நடத்துக்கிற இயக்கம் தி.மு.க.

திமுக கட்சியில் யார் வேண்டுமானாலும் தலைவர், முதலமைச்சர் பதவிக்கு வரலாம் என ஸ்டாலினால் சொல்ல முடியுமா? யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் மக்கள் தெளிவாக உள்ளார்கள். தற்போது அண்ணா திமுக ஆட்சியில் தமிழ்நாடு அமைதியாக உள்ளதாகவும், வளர்ச்சி பெற்றுள்ளதாகவும், சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளதாகவும், பாஜக ஆளும் மாநிலங்கள் கூட சிறந்த மாநிலமாக தேர்ந்தெடுக்க வில்லை.

தமிழ்நாட்டிற்கு எம்.ஜி.ஆர், அம்மா ஆட்சி தான் வேண்டும் என்று அண்ணா திமுகவிற்கு மக்கள் வாக்களித்தனர். திமுக கூட்டத்தை கூட்டிவிட்டு கிராம சபை கூட்டம் என்று சொல்லி வருகிறார் ஸ்டாலின். திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் முதல்வர் ஆகிய இருவரின் நடை உடை பாவனைகளை மக்கள் பாருங்கள். பார்த்துவிட்டு ஓட்டு போடுங்கள்.

அதிகார தோரணையோடு உதயநிதி, ஸ்டாலின் பேசி வருவதாகவும், அனைவரையும் அரவணைத்ததால் அண்ணா திமுக ஆட்சி 4 ஆண்டு காலம் தொடர்கிறது. கடுமையாக உழைத்து அம்மாவின் கனவை நிறைவேற்ற வேண்டும்.

இவ்வாறு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *