செய்திகள்

தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் குழந்தை பலி

Spread the love

காஞ்சீபுரம், அக். 10–

சென்னை செங்குன்றத்தில் வசிப்பவர் ஆரிமுத்து. இவர் தனது மனைவி சௌமியா, ஒரு வயது பெண் குழந்தை ரிஷிதாவுடன் காஞ்சீபுரம் அடுத்த விநாயகபுரம் என்ற இடத்தில் ஒரு தனியார் அரிசி ஆலையில் வேலை செய்து வந்தார்.

அவரது மகள் ரிஷிதா அங்குள்ள தண்ணீர் தொட்டி படிக்கட்டு வழியாக ஏறியது. திடீரென கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் விழுந்தது. குழந்தையின் அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.

இதுகுறித்து தகவல் கிடைத்தும் பாலுசெட்டி சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *