சினிமா செய்திகள் முழு தகவல்

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி

திரையில் காதல் என்றால் அதில் மன்னன் என்று சட்டென்று மனசில் ஒட்டக் கூடியவர் ஜெமினி கணேசன்!

மேட்டுக்குடி பிறந்து

பொன்மனச் செல்வன் மன்னிக்கவும் …

பெண் மன செல்வனாக மலர்ந்து,

காவியத் தலைவனாக

கனிந்து,

இரு கோடுகளுக்கு

நடுவில் இதயம் தொட்டு சிகரம் எட்டியவர்!

இப்படி உதடுகள் உச்சரிக்கும !

‘‘அண்டர் தி சன் எனக்கு எனக்கு தெரியாத விஷயமே இல்லை, ஆனா பெண்கள் விஷயத்தில் மட்டும் கடவுள் எனக்கு ஒரு வீக்னஸ் வச்சுட்டான்… ஒளிவு மறைவு இல்லாமல் பட்டவர்த்தனமாய் தன்னை படம் பிடித்து காட்டிய கபடமில்லாக் கலைஞன், புன்னகை மன்னன் ஜெமினி கணேசன்!

‘பிளேபாய்’ – தீராத விளையாட்டுப் பிள்ளை… அப்படியல்ல ஜெமினி கணேசன். காதல் அதன் இனிமையும் தெரிந்தவர் வலியையும் புரிந்தவர், நவரசம் – அறிந்தவர். தன்னிலை உணர்ந்தவர். நிஜத்திலும், நிழலிலும் ‘முகமூடி’ அணியாத மனிதன். மனசைத் திறந்து காட்டிய ‘மன்மதன்’!

தமிழ் சினிமாவின் பொற்காலம் 1950, 60 –70– 80 என்று சொல்லப்பட்ட காலகட்டத்தில் சேர – சோழ – பாண்டிய மன்னர்களைப் போல புகழின் உச்சியில் கொடிகட்டிப் பறந்தவர்கள் மூவர்.

ஒருவர் புரட்சித்தலைவர் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்., அடுத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மூன்றாமவர் காதல் மன்னன் ஜெமினி கணேசன், எம்.ஜி.ஆர். ஜனரஞ்சக ஆக்க்ஷன் ஹீரோ என்றால் ஒரு தனி!

சிவாஜி கணேசன், உணர்ச்சிகளைக் கொட்டி உருக்கும் நடிப்பில் ரசிகர்களை இறுக கட்டிப் போட்ட ஹீரோ என்றால் அவர் தனி.

வீரம் ஒரு பக்கம், ஈரம் மறுபக்கம் என்ற நிலை இருக்கும்போது இரண்டுக்கும் நடுவில் காதலைச் சொல்லி ஜெமினி கணேசன், இளசுகளின் இதயத்தில் இடம் பிடித்த ஹீரோ என்றால் அதுவும் தனி!

இப்படி ஆயுத எழுத்து (அக்கன்னா எழுத்து) மாதிரி தமிழ் திரை உலகை காப்பாற்றிய வல்லவர்களான இந்த மூவருக்கும் தனி இடம் உண்டு!

நவம்பர் 17 காதல் மன்னன் ஜெமினி கணேசனின் நூற்றாண்டு பிறக்கிறது.

மண்ணை விட்டு போனாலும் நம் மனசை விட்டு போகவில்லை, கண்ணை விட்டுப் போனாலும் நம் கருத்தை விட்டு போகவில்லை… இன்று இந்த நிமிடம் வரைக்கும் பேசக் கூடிய அற்புதமான கலைஞர்களில் முன்வரிசை நாயகர்களில் அவர் ஒருவர்!

‘‘ஆல்ரவுண்டர் , ஜென்டில்மேன், அவரைப் பிடிக்காமல் யாரும்… இருக்க முடியாது’’…

என்கிறார் பிரபல பட அதிபர் ஏவிஎம் சரவணன்!

எறும்புக்கு கூட தீங்கு நினைக்காத ஆத்மா! அவதார புருஷன் ஸ்ரீ ராமனுக்கு ஒரு சபரி மாதிரி எனக்கு காதல் மன்னன் ஜெமினி!… என்கிறார் என்றும் மார்க்கண்டேயன் சிவகுமார்!

‘‘அடகு வைத்த காதுகள் மீட்கப்படவில்லை என்று மெல்லிசை மன்னர்கள் எம்எஸ்வி – ராமமூர்த்தி இசையை… சொல்வதை போல… காதல், சிருங்கார ரச நடிப்பில் அவரிடம் ரசிகர்கள் தொலைத்த இதயம் இன்னும் மீட்கப்படவில்லை… நிழலில், நிஜத்தில்! காதல் மன்னன் அவரே’’ என்று ஆண் பெண் இருபாலாரும் கோரஸ் குரல் எழுப்பிய அற்புதக் கலைஞன் ஜெமினி கணேசன்!

என்கிறார் தன் திரையுலக முதல் படம் கற்பகம் மூலம் அறிமுகமாகி புன்னகை அரசியாய் இன்றும் நிலைத்திருக்கும் கே ஆர் விஜயா!

ஜெமினியோடு திரை பிரபலங்களின் சுவையான பேட்டி விரைவில்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *