வர்த்தகம்

கேட் நுழைவு தேர்வுக்கு ‘டைம்’ நிறுவன மாதிரி தேர்வு

சென்னை, மார்ச் 6–

இந்தியாவின் முன்னணி தேர்வு தயாரிப்பு நிறுவனமான ‘டைம்’ (ட்ரையம்பண்ட் ஆப் மேனேஜ்மென்ட் எஜுகேஷன்) 7–ந் தேதி ஞாயிற்று கிழமை அன்று கேட் பொது நுழைவு தேர்வுக்கு ஆன்லைனில் திறனாய்வு மதிப்பீட மாதிரி தேர்வுகளை நடத்தவுள்ளது.

இந்த தேர்வு காலை 10 மணி மற்றும் மாலை 6 மணி என இருவகை நேரங்களை கொண்டுள்ளது. தேர்வில் கலந்து கொள்ள விரும்பும் மாணவர்கள் இரண்டு நேரங்களில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யலாம். இரண்டு இடங்களுக்கும் பதிவு செய்ய முடியாது. தேர்வுகளில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு 2021–2022ம் ஆண்டுக்கான கேட் வகுப்பறை மற்றும் ஆன்லைன் கல்வி கட்டணத்தில் 100% சலுகைகள் உள்ளன.

7ந் தேதிக்கு முன்னர் தேர்வுகளை எழுதி குறிப்பிட்ட பாடத்திட்டங்களில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மொத்த பாடநெறி கட்டணத்தில் 10% தள்ளுபடி வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு www.time4education.co என்னும் இணையதளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *