செய்திகள்

சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 36 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது

Spread the love

சென்னை , செப். 21 –

சென்டிரல் ரெயில் நிலையத்தில் ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 36 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அவுரா எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று சென்டிரல் ரெயில் நிலையத்தில் 5வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் சோதனை நடத்தினர். அப்போது கையில் மூட்டைகளுடன் வந்த 3 பேரை பெண் போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் சரளா சோதனை நடத்தினார். அப்போது பாண்டி பூர்ணச்சந்திரன் (வயது 30 ) என்பவர் 18 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டையையும், கம்பம் வரதராஜ் (வயது 52 ) என்பவர் 10 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டையையும், ஒரிசாவைச் சேர்ந்த துர்சன் என்பவர் 8 கிலோ எடையுள்ள கஞ்சா மூட்டையையும் கடத்தி வந்ததது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *