செய்திகள்

நெஞ்சுவலி: பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் அனுமதி

கொல்கத்தா, ஜன. 2–

நெஞ்சுவலி காரணமாக பிசிசிஐ தலைவர் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ) தலைவர் சவுரவ் கங்குலி (வயது 48). அவர் இன்றுகாலை தனது வீட்டில் உடற்பயிற்சி செய்து கொண்டு இருந்தார். அப்போது அவருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனது. இதைத் தொடர்ந்து அவரை கொல்கத்தாவில் உள்ள உட்லேண்ட்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நெஞ்சுவலி காரணமாக அவர் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *