செய்திகள் வாழ்வியல்

காந்தி 150

Spread the love

மேல்நாட்டில் சட்டப் படிப்பு பயின்ற மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1888–ம் ஆண்டுவாக்கில் கோட்-சூட் என வெளிநாட்டினரின் உடைகளை அணியும் பழக்கத்தை கொண்டிருந்தார். அதற்கு 33 ஆண்டுகளுக்கு பிறகு 1921ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் மதுரைக்கு சென்ற அவர் இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என தனது ஆடைப் பழக்கத்தை மேற்கொண்டார். அவரது ஆடை அணியும் பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கான காரணம் பலருக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் சிலருக்கு தெரியாமல் இருக்கலாம்.

1921–ல் காந்திஜி சென்னையில் இருந்து மதுரைக்கு ரயிலில் பயணித்தார். ரயில் பயணிகளில் பலர் வெளிநாட்டு மில் துணியால் தயாரிக்கப்பட்ட ஆடைகளை அணிந்திருந்தனர். கைத்தறி ஆடை அணியுமாறு அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தேன். அதற்கு தலையசைத்து மறுப்பு தெரிவித்த அவர்கள், கைத்தறி துணி வாங்கும் அளவுக்கு வசதியில்லை என்று சொன்னார்கள் என்கிறார் காந்தி.

இந்த கூற்றுக்கு பின்புலமாக இருந்த அடிப்படை உண்மைகளை நான் உணர்ந்தேன். நான், வேட்டி, மேலாடை, தலைப்பாகை, அங்கவஸ்திரம் என பல ஆடைகளை அணிந்திருந்தேன். லட்சக்கணக்கான மக்கள் உடலை மறைக்க நான்கு முழத் துணிகூட இல்லாமல் இருக்கும்போது, நான் இவ்வளவு ஆடைகளை அணிந்திருப்பது சரியா என்ற கேள்வியை எழுப்பியது என்றார் காந்தி.

மதுரையில் நடந்த கூட்டத்திற்கு அடுத்த நாளில் இருந்து நான் இடுப்பில் வேட்டியும், தோளில் துண்டும் அணியத்தொடங்கி அவர்களுள் ஒருவராக மாறினேன் என்கிறார் காந்தி. இடையில் சிறு வேட்டியும் தோளில் துண்டும் அன்னிய ஆடைகளை விலக்கும் சத்தியாகிரக போராட்டத்தின் ஓர் அடையாளச் சின்னமாக மாறியது. இது காந்தியை ஏழை மக்களுக்கு மேலும் நெருக்கமானவராக்கி, அவரை நோக்கி ஈர்த்தது. ஏகாதிபத்தியம் எப்படி இந்தியாவை ஏழை நாடாக மாற்றியது என்பதைக் காட்டியது காந்தியின் ஆடைகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *