செய்திகள்

மாமல்லபுரத்தை அழகு படுத்த தேவைப்படும் நிதி, ஆய்வு விவரம்: அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

Spread the love

சென்னை, பிப். 25–

மாமல்லபுரத்தை அழகு படுத்த தேவைப்படும் நிதி,

தேவைப்படும் நிதி, ஆய்வு விவரங்களை மார்ச் 11 ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தை நிரந்தரமாகப் பாதுகாக்க வேண்டும் என்று கோரி, நீதிபதி கிருபாகரன் கடிதம் எழுதியிருந்தார். அதனைத் தாமாக முன் வந்து விசாரித்த நீதிபதிகள் வினீத் கோத்தாரி, சரவணன் அடங்கிய அமர்வு, இது குறித்து மத்திய, மாநில அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர். அதன் படி, கடந்த ஜனவரி 22 ஆம் தேதி இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அதில், மாமல்லபுர புராதன சின்னங்கள் உள்ள பகுதியில் புதிய கட்டிடம் கட்டுவதற்கும், பழைய கட்டிடங்களைச் சீரமைக்க, தடை விதிக்கப் பட்டிருப்பதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து, மாமல்லபுரம் யுனெஸ்கோவின் புராதன சின்னமாக அறிவிக்கப்பட்டிருப்பதால் அதனைச் சீரமைக்க மத்திய அரசு தான் நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

அறிக்கை அளிக்க வேண்டும்

இதனையடுத்து சீரமைக்கத் தேவைப்படும் நிதி குறித்த அறிக்கையை, தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி, பிப்ரவரி 25 ந் தேதிக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர். அதன்படி, இன்று மீண்டும் அந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மாமல்லபுரத்தை அழகுபடுத்திச் சீரமைக்கத் தேவைப்படும் நிதி குறித்து ஆய்வுக் குழு என்னென்ன விவாதித்தது? அதன் விவரங்கள் என்ன? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், இது குறித்து வரும் மார்ச் 11 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *