சென்னை, டிச. 29–
தமிழில் கருத்தாழமிக்க அரிய கலை நூல்களைப் பதிப்பிக்க நூலாசிரியர்களுக்கு நூல் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் கலை சார்ந்த நூல்களை எழுதும் நூலாசிரியர்களை ஊக்குவிக்கும் வண்ணம், கருத்தாழமிக்க அரிய தமிழ் நூல்களை பதிப்பிக்க, நூல் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் வீதம் 5 நூல்களுக்கு ரூ. 10 லட்சம் வழங்கிடும் திட்டத்தை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் நிறைவேற்றிட தமிழக அரசு ஆணையிட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் நூலாசிரியர்கள், தமிழில் கருத்தாழமிக்க, கலைகள் சார்ந்த நூல்களை பதிப்பிக்க பின்வரும் முகவரிக்கு 29.1.2021 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.