வாழ்வியல்

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?–2

Spread the love

​உணவோடு பழம்

தலைவாழை இலையில் விருந்து பரிமாறிய காலம் முதல், தற்போதைய தானே எடுத்துண்ணும் வழக்கம் (buffet system) வரையில், உணவோடு பழத்துண்டுகள், பழக்கலவைகள் பரிமாறுவது தொடர்கிறது. உணவுக்கு பின் பழங்கள் எதுவாக இருந்தாலும், வாழைப்பழமாக கூட இருந்தாலும் கூட, இதனைக் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக பலமான விருந்துக்கு பிறகு பழங்களை உட்கொள்ளும்போது செரிமான உறுப்புகள் தாமதமாகிறது. அதாவது, பழங்களை எளிதில் கிரகித்து கொள்ளும் செரிமான உறுப்புகளால் உணவு பொருள்கள் செரிமானம் ஆவது தடைபடுகிறது. பழங்களும் உணவும் இணைவதில்லை என்பதால், உணவு பொருள் செரிமானம் ஆவதில் அதிக தாமதம் உண்டாகிறது. அதனால் தான் நம்மவர்கள் பலமான விருந்துக்கு பிறகு வயிறு, ’டொம்’ என்றே இருக்கிறது என்று புலம்புவதை அடிக்கடி கேட்கிறோம்.

​தயிரோடு பழங்கள்

கோடைக்காலம் வந்தால், பலரும் தயிருடன் பழத்துண்டுகளை கலந்து இலேசாக சர்க்கரை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். இவை நிச்சயம் உடலுக்கு கேட்டையே தரும். தயிர் உடல்நலத்துக்கு ஏற்ற உணவுதான் என்பதோடு கூடுதல் புரத சத்தும் நிறைந்தது. பழங்களும் உடல்நலம் காக்கக்கூடிய அமிலங்களை உள்ளடக்கியதுதான். ஆனாலும், தயிருடன் பழத்துண்டுகளை சேர்த்து சாப்பிடும் போது, பழங்களில் இருக்கும் அமிலமானது புரதம் நிறைந்த தயிரில் சேர்ந்து சற்றே கூடுதலாக, உடலில் செரிமானத்தை தாமதமாக்குகிறது.

வயிறு உணவை ஏற்காமல் ஒவ்வாமையை வெளிப்படுத்துகிறது. சிலர் தயிர் சாதத்தில் வாழைப்பழம் சேர்த்து உண்பார்கள். இவை செரிமானத்தை தாமதமாக்குவதோடு உடலில் நச்சு தன்மையையும் ஏற்படுத்தி விடுகிறது. அதனால் இனி தயிருடன் பழங்களை கண்டிப்பாக சேர்க்காதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *