செய்திகள்

18 முதல் 35 வயது இளைஞர்களுக்கு சென்னையில் ஒரு மாத ‘மல்டி மீடியா’ இலவசப் பயிற்சி

Spread the love

சென்னை, நவ. 8

படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு மாத கால இலவச ‘மல்டிமீடியா’ பயிற்சி பெற திரைப்பட வளர்ச்சி கழகத்தின் உதவி பொது மேலாளர் தே.ராமகிருஷ்ணன் ஏற்பாடு செய்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:–

தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து வேலைவாய்ப்பு சார்ந்த இலவச திறன் மேம்பாட்டு பயிற்சியை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம் எழும்பூரில் நடத்தவுள்ளது. டிஜிட்டல் நான் லீனியர் படத்தொகுப்பு, ஆடியோ எடிட்டிங் மற்றும் வீடியோ கேமரா ஆகிய பிரிவுகளில் இலவச பயிற்சி வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு 18 முதல் 35. ஆண் / பெண் இருபாலரும் சேரலாம். கல்வித் தகுதி குறைந்தது 10ம் வகுப்பு (பாஸ் / பெயில்), பயிற்சி காலம் 240 மணி நேரம். பயிற்சி நேரம்: தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை (திங்கள் முதல் வெள்ளி வரை). பயனாளிகளுக்கு உதவித்தொகை தினமும் ரூ.100/– பயிற்சியின் முடிவில் கணக்கிட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மூலம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள். நேர்முக தேர்வுக்கு வரும் விண்ணப்பதாரர்கள் தங்களது 10ம் வகுப்பு மதிப்பெண், மாற்று (டி.சி), சாதி ஆகிய சான்றிதழ்களின் நகல்களை தவறாமல் கொண்டு வர வேண்டும். மேலும் 2 பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படமும் கொண்டு வர வேண்டும்.

இப்பயிற்சிக்கான நேர்முக தேர்வு இம்மாதம் 11ந் தேதி முதல் 14ந் தேதி வரை தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகம், கோ–ஆப்டெக்ஸ் வளாகம், முதல் மாடி, கிடங்கு கட்டிடம், நெ.350, பாந்தியன் சாலை, எழும்பூர் என்ற முகவரியில் நடைபெறும்.

இப்பயிற்சிகள் 90% செய்முறை பயிற்சிக்காக நடத்தப்படும். பயிற்சின் முடிவில் தமிழ்நாடு மாநில தொழிற்கல்வி மையம் மூலம் சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்பயிற்சியின் மூலம் சினிமா, தொலைக்காட்சி, செய்திகள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் உள்ளூர் போட்டோ ஸ்டூடியோக்களில் வேலைவாய்ப்பு பெறலாம். மேலும் சுயதொழில் செய்தும் பயன் பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு: 044 2819 1203, 2819 2506, 2819 2407 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *