செய்திகள்

அரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்

அரசு பள்ளி, சுகாதார மையங்களுக்கு டிவிஎஸ் சீனிவாசன் அறக்கட்டளை கொரானா தடுப்பு இலவச மருந்து பொருட்கள்

சேர்மன் வேணு சீனிவாசன் தகவல்

சென்னை, நவ. 24

கொரிய குடியரசு தூதரகமும் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியின் சீனிவாசன் சேவை அறக்கட்டளையும் இணைந்து இலவச மருத்துவ 4 ஆயிரம் உபகரண கிட்டுகளை வினியோகம் செய்துள்ளன.

கொரிய குடியரசின் தேசிய தினத்தை முன்னிட்டு தெர்மாமீட்டர், கிருமி நாசினி, கை கழுவும் கிரீம் ஆகியவை அடங்கிய இந்த இலவச மருத்துவ கிட்டுகளை தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு வழங்கியுள்ளன.

டிவிஎஸ் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் கூறுகையில், “நாடு முழுவதும் உள்ளூர் சமுதாய மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறோம். தற்போது நாடு கண்டுள்ள பெரும் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்ற தேவையான நடவடிக்கைகளையும் செயல்படுத்தி வருகிறோம். இதில் கொரிய தூதரகத்தின் இந்த உதவி முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இரு நாட்டுக்கும் இடையிலான நல்லுறவை அர்த்தமுள்ளதாகவும் வலுவானதாகவும் மேம்படுத்த காரணமாக இருக்கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியை கொரிய தூதராக இயக்குனர் யங் சீப் குவான் மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவன தலைவர் வேணு சீனிவாசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *