வர்த்தகம்

119 மாணவர்களுக்கு அதானி பவுண்டேசன் நிறுவனம் இலவச சைக்கிள் வழங்கியது

திருவள்ளூர், ஜன. 11

திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பள்ளி துறைமுக பகுதிக்குட்பட்ட வயலூர், திருவெள்ளவாயல், நெய்தவாயல் பஞ்சாயத்துகளை சேர்ந்த பொருளாதாரத்தில் பின்தங்கிய பள்ளி மாணவ, மாணவிகள் மிகவும் சிரமான சூழ்நிலையில், தினமும் 7 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று கல்வி பயின்று வருகின்றனர்.

இதனால், படிப்பில் முழுமையாக கவனம் செலுத்த முடியாமல் பள்ளி இடைநிற்றல் அதிகமாகி வருவதை கருத்தில் கொண்டு மாணவ, மாணவிகளின் சிரமங்களைப் போக்கும் வகையில் அதானி பவுண்டேஷன் சார்பில் சைக்கிள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த சைக்கிள்கள் கடற்கரை பகுதிகளுக்கு ஏற்ற வகையில் கடற்காற்றினால் துருபிடிக்காத வகையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகின்றன. இதுவரை நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் அதானி பவுண்டேஷன் மூலம் பயனடைந்துள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக அதானி பவுண்டேஷன், அதானி காட்டுப் பள்ளி துறைமுகம்- சமுதாய வளர்ச்சி பணிகள் சார்பாக, 119 மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதி வண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி திருவெள்ளைவாயல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருவெள்ளைவாயல் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். வாயலூர் பஞ்சாய்த்து தலைவர் வி.ஜி.கோபி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர் மகாலட்சுமி பிரகாஷ், திருவெள்ளை வாயல் பஞ்சாயத்து தலைவர் ரவிச்சந்திரன், பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் தலைவர் துலுக்கானம், திருவெள்ளைவாயல் வார்டு உறுப்பினர் தியாகராஜன், வாயலூர் துணைத் தலைவர் ராஜேஷ், அதானி நிறுவன அதிகாரிகள் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள்களை வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *