செய்திகள்

பிரபல மசூதியை இழுத்து மூட பிரான்ஸ் அரசு நடவடிக்கை

பாரீஸ், அக். 21-

பாரிஸின் வடக்கு புறநகரில் உள்ள ஒரு பிரபலமான மசூதி, இஸ்லாமிய குழுக்கள் மற்றும் ஒரு சந்தேகத்திற்குரிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அந்த மசூதி பிரெஞ்சு அதிகாரிகளால் மூடப்பட உள்ளது.

தீவிர மத நம்பிக்கைகளை ஊக்குவித்தல், வெறுப்பை பரப்புதல் மற்றும் வன்முறையை ஊக்குவித்தல் என சந்தேகிக்கப்படும் நெட்வொர்க்குகளை பிரெஞ்சு காவல்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாக பான்டினில் உள்ள மசூதி ஆறு மாதங்களுக்கு மூடப்படும் என்று உள்துறை அமைச்சர் ஜெரால்ட் தர்மனின் நேற்று தெரிவித்தார்.

47 வயதான வரலாறு மற்றும் புவியியல் ஆசிரியர் சாமுவேல், தனது வகுப்பில் கருத்து சுதந்திரம் பற்றிய ஒரு விவாதத்தின் போது, முகமது நபியின் இரண்டு கேலிச் சித்திரங்களை மற்ற கார்ட்டூன்களுடன் சேர்த்து காண்பித்துள்ளார். இதனையடுத்து. வன்முறையைத் தூண்டும் வகையில் மசூதி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பாரிஸிலிருந்து வடமேற்கே 20 மைல் தொலைவில் உள்ள கான்ஃப்லான்ஸ்-சைன்ட்-ஹொனொரைனில் உள்ள தனது மேல்நிலைப் பள்ளிக்கு வெளியே சாமுவேல் குத்தப்பட்டு தலை துண்டிக்கப்பட்டார். இந்த கொடூர குற்றத்தை செய்த செச்சென் வம்சாவளியைச் சேர்ந்த 18 வயது அப்துல்லாக் அன்சோரோவ் என்பவர் பின்னர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட 16 பேரில் அன்சோரோவின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடங்குவர்.

இதையடுத்து பிரெஞ்சு கல்வி மந்திரி ஜீன்-மைக்கேல் பிளாங்கர், நேற்று ஆசிரியர் சாமுவேலுக்கு மரணத்திற்குப் பின் வழங்கப்படும் பிரான்சின் மிக உயர்ந்த விருதான லெஜியன் டி ஹொன்னூர் வழங்கப்படும் என்றும், பாரிஸில் உள்ள சோர்போன் பல்கலைக்கழகத்தில் இன்று அவரது நினைவாக ஒரு தேசிய விழா நடைபெறும் என்றும் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *