செய்திகள் வாழ்வியல்

தலைவலி முன்னாடி தேவையில்லை கண்ணாடி | மருத்துவர் சதீஷ்குமார்

Spread the love

தொழில் நுட்பங்களின் வரத்தாலும் இணைய பயன்பாட்டின் வளர்ச்சியாலும் நாம் அதனை தவிர்ப்பது என்பது இன்றியமையாதது.

தொலைக்காட்சிகளின் ஆதிக்கத்தாலும், கைப்பேசிகளின் அரவணைப்பாலும் இடைவிடாது அதனை பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களுக்கு உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதில் முக்கியமான ஒன்று பார்வை குறைபாடு.

தொழில் ரீதியாகவும் சரி அதற்கு அப்பாற்பட்டும் சரி, அதிக நேரம் கைபேசி பார்ப்பது, கணினி குறித்த வேலைப்பாடுகள் செய்வது, போதிய சத்துக் குறைபாடு என பல்வேறு காரணங்களால் எளிதில் கண்களில் கோளாறுகள் ஏற்படுகிறது.

அடிக்கடி தலைவலி, பார்வை குறைபாடு ஏற்படும் பட்சத்தில் கண்கண்ணாடியின் உதவியை நாடும் நமக்கு கண் பயிற்சி மூலம் சரிசெய்யலாம் என்பது எத்தனை பேருக்கு தெரியும்…?

அப்படி கண்ணாடியை தவிர்த்து கண் பயிற்சி மூலமே இதனை சரிசெய்யலாம் என்கிறார் “தி ஸ்கூல் பார் பெர்பெக்ட் விஷன் பள்ளியின் இயன்முறை மருத்துவர் சதீஷ்குமார்.

20 ஆண்டுகளாக கண் மருத்துவராக பணியாற்றி வந்தவருக்கு கண் பயிற்சி மூலம் அதனை சரிசெய்யலாம் என்ற எண்ணம் உதித்தது தனது மகனை புதுச்சேரியில் உள்ள அரவிந்தோ ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றபோது அங்கு செயல்படுத்தப்பட்ட நுட்பங்களைக் கண்டு ஈர்க்கப்பட்டனர். அதன் வெளிப்பாடே இன்று கோவை சாய்பாபா காலனியில் இயங்கி வரும் “தி ஸ்கூல் பார் பெர்பெக்ட் விஷன்” பள்ளி.

அரசு பள்ளி மாணவர்களுக்கு முற்றிலும் இலவசம்…! அதுபோக ஏழை, எளியோர்களுக்கு அவரவர் விருப்பம் போல் என கட்டணம் பெறுகிறார். 2016ம் ஆண்டு தொடங்கி இந்த சேவையை செய்து வருகிறார்.

எளிய முறையில் பயிற்சிகள்

இதுகுறித்து டாக்டர் சதீஷ் கூறும்போது,

கண்ணில் ஏற்படும் சேதம் மற்றும் மன அழுத்தத்தின் அளவைப் பொறுத்து, கண்ணாடியை களைவது சாத்தியம். பொதுவாக கண்பார்வை குறைபாடு என்பது அதிகரித்து வருகிறது.

இதனால் கண்ணாடி அணிபவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

பார்வை குறைபாடு ஏற்பட்டால் கண்ணாடி அணிவது என்பதை விட “Dr.Bates” கண்பயிற்சி மூலமாக சரிசெய்யலாம். தற்போதைய ஆய்வுப்படி 7ல் ஒரு குழந்தைக்கு இந்த கண்குறைபாடு உள்ளது.

நியூட்ரிஷன் குறைபாட்டினாலும், சூரியஒளி பற்றாக்குறையினாலும், டிவி, கைபேசி போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்துவது போன்றவையே முக்கிய காரணங்களாக கருதப்படுவதால் முடிந்தவரை இதனை தவிர்க்க முற்பட்டால் கண் தொடர்பான பிரச்சனையை மேலும் அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல், கூடுதலாக கண் பயிற்சி செய்தால் கண்ணாடியை முற்றிலுமாக தவிர்க்க முடியும்.

இதற்கான பயிற்சி எங்களது தி ஸ்கூல் பார் பெர்பெக்ட் விஷன் பள்ளியில் நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சியில் பங்கேற்க அதிகபட்ச வயது 45. ஒரு அமர்வு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும்.

மேலும் ஞாயிற்றுக்கிழமை தவிர இடைவெளி இல்லாமல் 14 அமர்வுகள் பங்கேற்க வேண்டும். பயிற்சிகளில் ஈரப்பதம், தளர்வு, அக்குபிரஷர் மற்றும் வலுப்படுத்தும் நுட்பங்கள் அடங்கும்.

அனைத்து வயதினருக்கும் கண்பார்வையை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி பள்ளிகளிலும், சிறிய கூட்டங்கள் வாயிலாகவும் கலந்துரையாடல் நடத்த தயாராக இருக்கிறேன்.

  • மவுனிகா ரவிச்சந்திரன்

* * *

அரும்புகளின் …

பிறந்த குழந்தைகள் இயற்கையிலேயே நீச்சல் வித்தைகளைப் பெற்றிருக்குமாம் தண்ணீருக்கு அடியில் குழந்தைகளால் மூச்சை அடக்கி ‘தம்’ கட்ட முடியுமாம்! சுமார் பத்து மாதங்கள் கருவில் மிதந்து கொண்டிருந்த அனுபவம் தான் அது! வயதாக ஆக இத்திறமைகள் வேகமாக மறைந்து விடுகின்றன. புதிதாகக் கற்றுக் கொள்ளும் வரை.

 

பிறந்த குழந்தைகளுக்கு கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் மட்டும் தான் தெரியும். அவர்கள் வளர வளர பார்வையும் வளர்ச்சி பெற்று, மற்ற நிறங்களால் கவரப்படுகின்றனர்.

பிறந்த குழந்தைக்கு நான்கு மாதம் ஆகும் வரை உப்பின் சுவை தெரியாதாம். இதற்கு சோடியத்தை உருவாக்கும் சிறுநீரகங்கள் முழு வளர்ச்சியடையாமல் இருப்பது தான் காரணம்

* * *

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *