வாழ்வியல்

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?–3

Spread the love

கப் கேக் +பழச்சாறு, தானியம் + பழச்சாறு

காலை வேளையில், அவசர உணவாக பலருக்கும் எளிதாக கைகொடுப்பது கப் கேக். அதனோடு கூடவே ஒரு தம்ளர் பழச்சாறு. இந்த காம்போ போதும். உடலுக்கு வேண்டிய ஆற்றல் உடனடியாக கிடைத்துவிடும் என்று நினைக்கிறார்கள். இன்று இளவயதினர் அனைவருக்கும் காலை நேர உணவு இதுவாகத் தான் இருக்கிறது.

உடல் உழைப்புக்கு தேவையான ஆற்றலை வழங்கும் புரதம், நார்ச் சத்து, கலோரி குறைவதால், உங்கள் உடல் அதிகப்படியான சோர்வுக்கு தான் உள்ளாகும். அதோடு இவை உடலில் இரத்த சர்க்கரை அளவிலும் துரித மாற்றத்தை உண்டாக்குகிறது.

கேக்குக்கு பதிலாக தானியங்கள் எடுத்துக் கொண்டால் உடலுக்கு தேவையான சத்து கிடைத்து விடும் என்று நினைப்பவர்களும் தவறு செய்கிறார்கள் என்றே கூற வேண்டும். ஏனெனில் தானிய வகைகள் எதுவாக இருந்தாலும் அதை தனித்து சுண்டலாகவோ, முளைகட்டிய பயிறாகவோ, சாலட் ஆகவோ எடுக்கும் போது, அவை போதுமான ஆற்றலை தராது.

மேலும் இதனோடு பழச்சாறுகள் எடுக்கும் போது, அவை தானியங்களில் உள்ள கார்போஹைட்ரேட் குறைப்பதை தடுக்கவே செய்கின்றன.

அதேபோல், பெரிய வணிக வளாக உணவகங்களில் இன்று சேர்க்கை உணவுகளாக, பர்கருடன் வறுவலான மொறுமொறு பிங்கர் சிப்ஸ் போன்றவை பலருக்கும் விருப்பமாக இருக்கிறது. இந்த இரண்டும் அதிகப்படியான மிதமிஞ்சிய கொழுப்புகளை உள்ளடக்கியிருப்பதால், உங்களை புத்துணர்ச்சி இழக்க செய்யும். சோர்வாக உணர வைக்கும். மேலும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவையும் குறைக்க செய்யும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *