வாழ்வியல்

சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் என்னென்ன?–1

Spread the love

உடல் உறுப்புகள் நலத்தோடு இயங்கத் தேவையான சத்தை உண்ணும் உணவிலிருந்துதான் பெறுகிறோம். உடல்நலக் குறைபாடு ஏதேனும் உடலில் இருந்தால், அதை உணவின் மூலமே சரிசெய்து வாழ்ந்தவர்கள்தான், நமது தமிழ் முன்னோர்கள். அத்தகைய தொன்மரபு உணவை மறந்து, நவீன உணவுலகத்தில் நுழைந்து இன்று நாம் மருந்தையே உணவாக உட்கொள்ளும் அளவுவுக்கு மாறிவிட்டோம்.

இது ஒருபுறம் என்றால் மறுபுறம் உண்ணும் உணவு ஒவ்வொன்றும் ஒவ்வொரு சத்தை மட்டுமல்ல ஒவ்வொரு தனித்தன்மையையும் கொண்டுள்ளது. அந்த வகையில் சில உணவு வகைகள், அவை அதிகப்படியான உடலுக்கு நலம் தருவதாக இருந்தாலும் கூட, சேர்த்து எடுக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மை காலங்களாக, பல உணவுப் பொருள்களை சேர்த்து சாப்பிடும் பழக்கம் கூடி வருகிறது. இதனால், உடல்நலம் பின்னடைகிறது என்பதை பலரும் அறிவதில்லை. சுவையான சத்தான உணவுகளை ஒரே நேரத்தில் சாப்பிடும்போது, அவை சத்துக்களை சேர்ப்பதற்கு பதிலாக துன்பங்களையே தந்துவிடும்.

இதுகுறித்த போதிய விழிப்புணர்வு மக்களுக்கு அவ்வபோது கொடுத்து கொண்டே இருப்பது கட்டாயம் என்கிறார்கள் ஊட்டச்சத்து நிபுணர்கள். அந்த வகையில் எந்தெந்த உணவு வகைகளை சேர்த்து சாப்பிடகூடாது என பார்ப்போம்.

​உணவோடு தண்ணீர்

சாப்பிடும் போது தண்ணீர் குடிக்க கூடாது. சாப்பிட்டு முடிக்கும் வரை தண்ணீர் குடிப்பது செரிமான மண்டலத்தின் பணியை தாமதமாக்கும். நாம் எடுத்து கொள்ளும் உணவிலிருந்து சத்துகளை உறிஞ்சி சக்கையை வெளியேற்றும் செரிமான மண்டலத்துக்கு தேவை, வயிற்றுக்குள் சுரக்கும் அமில நீர். இந்த சுரப்பு சீராக செயல்பட்டால், செரிமான மண்டலமும் சீராக செயல்படும்.

உணவின் போது அதிக அளவு தண்ணீர் குடிக்கும் போது, வயிற்றில் சுரக்கும் அமிலத்தை இந்த நீர் நீர்த்து போக செய்கிறது. இதனால் உணவு செரிக்க காலதாமதமாகிறது.

குறிப்பு:

அதற்காக தொண்டையில் உணவு பொருள் சிக்கிகொண்டாலோ அல்லது விக்கல் சமயத்திலோ, தொண்டை அடைப்பது போன்ற உணர்வு ஏற்பட்டாலோ கூட தண்ணீர் குடிக்க கூடாது என்ற அவசியம் அல்ல. தவிர்க்க முடியாத நேரங்களில் சிறிதளவு குடித்தால் போதும். சாப்பிட்ட பிறகு சிறிதுநேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *