செய்திகள்

139–வது பிறந்தநாள்: பாரதியார் சிலைக்கு அமைச்சர்கள் மாலை

சென்னை, டிச.11–

மகாகவி பாரதியாரின் 139–வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசின் சார்பில், அமைச்சர்கள், சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு இன்று (11–ந் தேதி) காலை 9.30 மணியளவில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

ஜெயலலிதாவின் நல்லாசியுடன் செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலான அரசு, தமிழ்ச்சான்றோர்கள், விடுதலைப் போராட்ட தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரை பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழா கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த வகையில், மகாகவி பாரதியாரின் பிறந்த தினமான டிசம்பர் 11–ம் நாள், ஒவ்வொரு ஆண்டும் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

அதன்படி, மகாகவி பாரதியாரின் 139–வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் சென்னை மெரினா கடற்கரை, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அன்னாரின் திருவுருவச் சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த திருவுருவப் படத்திற்கு மீன்வளத்துறை அமைச்சர் டி. ஜெயக்குமார், ஊரகத் தொழில்துறை அமைச்சர் பா. பென்ஜமின், தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகத் தலைவர் பா. வளர்மதி கலந்துகொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இந்நிகழ்ச்சியில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசுச் செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தி மக்கள் தொடர்புத்துறை கூடுதல் இயக்குநர் (செய்தி) கி.சாந்தி, இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *