செய்திகள்

ஹெலிகாப்டர் வழக்கில் சிக்கிய தெலுங்கு பட அதிபர்

விஜயவாடா, அக். 30

நெல்லூர் மாவட்டத்தில் உள்ள ஜில்லா பரிஷத் பள்ளி ஒன்றின் மைதானத்தில் முறைப்படி அனுமதி வாங்காமல் ஹெலிகாப்டரை தரை இறக்கியதாக பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலுங்கு பட உலகில் முன்னணி தயாரிப்பாளர், சிவில் விமான போக்குவரத்து துறையின் முன்னாள் அதிகாரி ராமகோடீஸ்வர ராவ். இவர் தனது நெருங்கிய நண்பனின் மகனுடைய கல்யாணத்தில் பங்கேற்று வாழ்த்தினார்.

தன் குடும்பத்தில் ஒருவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலியில் வரவேண்டிய கட்டாயம் காரணமாக இவர், கல்யாணத்துக்கு வர ஹெலிகாப்டரை பயன்படுத்தினார். ஹெலிகாப்டர், அரசுப் பள்ளி மைதானத்தில் தரை இறங்கியது. அந்நேரம் ஹெலிகாப்டர் முன்னால் நின்று குடும்பமே புகைப்படம் எடுத்துக் கொண்டது. அந்த படத்தை குடும்பத்தில் ஒருவர் வாட்ஸ் ஆப்பில் வெளியிட்டார். அடுத்த நிமிடம் அந்த படம் வைரலானது.

இது விஷயம் உள்ளூர் போலீசார் கவனத்துக்கு வந்தது. நாங்கள் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி கொடுக்க வேண்டும். அப்படி அனுமதி இல்லாமல் தரையிறங்கியது எப்படி என்று கேட்டு ராம கோடீஸ்வர ராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பள்ளி தலைமை ஆசிரியரிடம் இருந்து ஆட்சேபம் இல்லை என்று கடிதம் வாங்கினோம்; அதனாலேயே பள்ளி மைதானத்தில் தரை இறக்கினோம் என்று தயாரிப்பாளர் விளக்கம் தந்தார்.

ஒரு ஹெலிகாப்டர் எங்கு தரை இறங்குகிறதோ அந்தப் பகுதியின் மாவட்ட கலெக்டரிடம் ஆட்சேபம் இல்லை என்று அனுமதி வாங்க வேண்டும். இல்லையா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் முன்அனு மதி பெற வேண்டும். ஆனால் நீங்கள் அப்படி எதையும் செய்யவில்லை என்று கூறி தயாரிப்பாளர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *