செய்திகள் வர்த்தகம்

கொரோனா நாட்களில் களப்பணி: ராஜஸ்தான் காஸ்மோபொலிடன் கிளப் திவா அறக்கட்டளைக்கு ஓ.பன்னீர்செல்வம் விருது

சென்னை, பிப். 25–

சென்னை கிண்டி ஐ.டி.சி.சோழா நட்சத்திர ஹோட்டலில் ராஜஸ்தான் காஸ்மோபொலிடன் கிளப் திவா அறக்கட்டளை நடத்திய நிகழ்ச்சியில் தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். கொரோனா தொற்று நோயாளிகளுக்கென தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளைக் கொண்ட பராமரிப்புக்கான அவசர மையங்களை அமைத்து துணை மருத்துவப் பணியாளர்களைக் கொண்டு கொரோனா கண்டறிதலுக்கான நடமாடும் மருந்தகங்களை தொடங்கி இயக்கியது, தொற்று நோயால் தவிக்கும் மக்களுக்கு தேவையான அவசர உணவுப் பொருட்களை வழங்குதல் போன்ற பணிகளை தொய்வு இன்றி செய்த நபர்களை பாராட்டினார். இந்த விருதில், கொரோனா காலங்களில் பணியாற்றிய காவல்துறையினர், மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோரின் மாதிரி உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்தன.

இந்த நிகழ்வில் ஸ்ரீ ஹரிஷ் மேத்தா, ஸ்ரீ அபயாச ஸ்ரீஸ்ரிமல், ஸ்ரீ ஜஸ்வந்த் முனோத், ஸ்ரீ தவுலத் ஜெயின், கைலாஷ் கோத்தாரி, ஸ்ரீ கிஷோர் ஜெயின், ஸ்ரீ பிரமோத் சோர்டியா, ஸ்ரீ பரஸ் ஜெயின், ஸ்ரீ மஹவீர் லுனாவத், ஸ்ரீ வினோத் சிங்வி, ஸ்ரீ பிரவீன்பாய் மேத்தா, ஸ்ரீ நரேந்திர சாகரியா, கிம்ராஜ் சகரியா, ஸ்ரீ சுதிர் லோதா, ஸ்ரீ டி.கே ஜெயின் மற்றும் ஹரிஷ் மார்லேச்சா ஆகிய 16 முன்கள பணியாளர்களை பாராட்டி பெருமைப்படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா காலங்களில் பணியாற்றிய முன்களப் பணியாளர்கள் பாராட்டி பெருமைப்படுத்திய துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இந்த அறக்கட்டளைத் தலைவர் மணிஷா ப்ரமோத் சோர்டியா மாநில பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராகியுள்ள அறிவிப்பையும் வெளியிட்டார்.

பின்னர் பேசிய ராஜஸ்தான் காஸ்மோபொலிடன் கிளப் திவா அறக்கட்டளையின் தலைவரும், தமிழாடு மாநில பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராகியுள்ள மனிஷா பிரமோத் சோர்டியா, எந்த வித எதிர்பார்ப்பும், தன்னநலம்மற்ற உழைப்பும் கொடுத்தால் இது போன்ற வாய்ப்புகள் கிடைக்குமென்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *