செய்திகள்

‘‘கடத்தலால் உள்நாட்டு தொழில் பாதித்து வேலை இழப்பு அதிகரிப்பு’’ கருத்தரங்கு

Spread the love

சென்னை, ஜன. 24–

தமிழ்நாடு மாநில நுகர்வோர் சச்சரவுகள் நிவாரண ஆணையம், சென்னை இந்திய வர்த்தக சபை பெடரேசனின் பொருளாதாரத்தை அழிக்கும் கடத்தல் மற்றும் கள்ள நடவடிக்கைகளுக்கு எதிரான குழு நீதிபதி எஸ். தமிழ்வானன் தலைமையில் ‘கள்ளநோட்டு, கடத்தல்களை கட்டுப்படுத்துதல்; வளமான தேசத்தை கட்டமைக்கும் நடவடிக்கை’ என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது. கள்ள நோட்டு மற்றும் கடத்தல்களால் ஏற்படும் அபாயங்கள் குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவம் மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை மேம்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளின் தேவை பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

தமிழக சிவில் சப்ளை டிஜிபி பிரதீப் வி.பிலிப் பேசுகையில், ‘பிக்கி’ தமிழ்நாடு மாநில கவுன்சில் தலைவர் மற்றும் கே.சி.பி. நிறுவன இணை நிர்வாக இயக்குனர் கவிதா தத் வரவேற்புரையில், கள்ளநோட்டு, கடத்தல் தொழில்கள் நுகர்வோர், அரசு மற்றும் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக பாதிக்கிறது. சட்டவிரோத வர்த்தகம் வளர்ச்சியில் கடுமையான வீழ்ச்சியை உண்டாக்குகிறது. இது பெருமளவில் கட்டுப்படுத்தப்பட வேண்டும். இந்தியாவில் முறையாக வரி செலுத்தும் நாடாக மாற்றவும் முன்னேற்றமடையும் தேசத்தை உருவாக்கும் குடிமக்களை ஒரு அங்கமாகத் திகழ ஊக்கப்படுத்தவும் பொருள் வாங்கும் ஒவ்வொரு தடவையும் அதற்கான பில்லை வாங்க வேண்டும் என்று நுகர்வோருக்கு அறிவுறுத்தப்பட வேண்டும். என்று தெரிவித்தார்.

இந்த அமைப்பின் அறிக்கையின்படி ஏழு உற்பத்தித் துறைகளில் சட்டவிரோத சந்தைகள் காரணமாக தொழில்துறைக்கு, மொத்த இழப்பு ரூ. 1 லட்சத்து 05 ஆயிரத்து 381 கோடி, அரசுக்கு மொத்த இழப்பு, ரூ 39 ஆயிரத்து 239 கோடியும் ஏற்பட்டன. பல்வேறு துறைகளில் புகையிலை தயாரிப்பு துறையால்தான் கருவூலத்திற்கு அதிகபட்சமாக ரூ. 9 ஆயிரத்து 139 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டது. அதற்கு அடுத்து மொபைல் போன்கள் ரூ.6 ஆயிரத்து 705 கோடியும், மது பானங்களால் ரூ. 6309 கோடியும் இழப்பு ஏற்பட்டது என்று கூறியது.

கடந்த சில மாதங்களில் தமிழ்நாட்டில் தங்கம், சிகரெட் போன்ற கடத்தப்பட்ட பொருள்கள் ஏராளமாக சுங்கம், காவல்துறை மற்றும் மாநில அமலாக்கத்துறை

நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இந்த அறிக்கையின்படி, சமீபத்தில் கம்போடியாவிலிருந்து ரூ. 7 கோடி மதிப்புள்ள கடத்தல் சிகரெட்டுகளை டி.ஆர்.ஐ. சென்னை துறைமுகத்தில் பறிமுதல் செய்தது. சென்னை, கோயம்பத்தூர், மதுரை போன்ற முக்கிய நகரங்கள் தவிர பிற சிறு நகரங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *