வாழ்வியல்

வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தால் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும்

20 கிராம் வெந்தயம் 50 கிராம் வெங்காயம் இரண்டையும் அரை லிட்டர் விளக்கெண்ணையில் காய்த்து, வடிகட்டி, பாலில் அரை கரண்டி எண்ணெய் விட்டு காலையில் இருபது நாட்கள் குடிக்க கணைச்சூடு தீரும்.

100 கிராம் வெந்தயத்தை வறுத்து, பொடியாக்கி, 200 கிராம் சர்க்கரை சேர்த்து உண்ண பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் வயிற்று வலி, இடுப்பு வலி நீங்கும். வெந்தயத்தை கஷாயமாக்கி குடித்தாலும் வலி தீரும்.

200 கிராம் வெந்தயத்தை பாலில் ஊற வைத்து, மீண்டும் இளநீரில் ஊற வைத்து, உலர்த்தி பொடியாக்கி, கற்கண்டை சேர்த்து, காலை உணவுக்குப் பின் ஒரு கரண்டி சாப்பிட்டு சுடுநீர் அல்லது பால் சாப்பிட்டு வர (40 நாள்) உடல் பலம் ஏற்படும். ஆரோக்கியம் பெருகும்.

தோசைக்கு சேர்க்கும் உளுந்துடன் சிறிதளவு வெந்தயம் சேர்க்க பலம் ஏற்படுவதோடு தோசை நிறமாக இருக்கும்.

தேங்காய் எண்ணையில் வெந்தயம், கற்பூரத்தை போட்டு ஊற வைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு ஒழியும். பாலில் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து தேய்த்து குளிக்க பேன், பொடுகு தீரும்.

வெந்தயம், பாசிப்பயறு இவற்றை இரவு ஊற வைத்து காலையில் அரைத்து உடலில் தேய்த்து குளிக்க கற்றாழை நாற்றம் நீங்கும். இதை தலையில் தேய்த்து குளிக்க முடி உதிராது. கண் குளிர்ச்சி ஏற்படும். தலைச்சூடு நீங்கும். பேன், பொடுகு, அரிப்பு நீங்கும்.

வெந்தயத்தை மாவாக்கி, இனிப்பு சேர்த்து களி போல கிளறி உண்டு வந்தால் நோய்கள் நீங்கும். உடல் சூட்டையும் கட்டுப்படுத்தும். மேலும் ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து பருக்கள் உள்ள இடத்தில் பூச, பரு மறையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *