செய்திகள்

போக்குவரத்து வாகனங்களுக்கு இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தகுதி சான்று: தமிழக அரசு அறிவிப்பு

Spread the love

சென்னை, பிப்.15–

போக்குவரத்து வாகனங்கள் இனி 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி (தகுதிச்சான்று) வாங்கினால் போதும் என அறிவிக் கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

தமிழகத்தில் போக்குவரத்து வாகனங்களுக்கு மத்திய மோட்டார் வாகன விதிகளின்படி, வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வாகனத்தை ஆய்வு செய்து தகுதிச் சான்று (எப்.சி) வழங்கி வருகின்றனர்.

தற்போது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையில் புதிதாக கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தத்தின்படி, அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும், புதிதாக பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 8 ஆண்டுகள் வரை இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையும், 8 ஆண்டுகளுக்கு மேல் உள்ள வாகனங்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறையும் தகுதிச் சான்று வழங்கப்படும் என போக்குவரத்து ஆணையரகம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை பொது போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர். லாரி போன்ற பெரிய கனரக வாகனங்கள், ஒருமுறை எப்.சி வாங்க வேண்டும் என்றால் ரூ.50 ஆயிரம் வரை செலவாகும். தற்போது, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி. சான்று வாங்கினால் போதும் என்ற அறிவிப்பால் ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் மிச்சமாகும் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *