செய்திகள்

அண்ணாநகர் வி.ஆர். மாலில் ‘ட்ரீம் சோன்’ சார்பில் பேஷன் ஷோ, ஆடை அலங்கார அணிவகுப்பு

Spread the love

சென்னை, செப். 21

அண்ணா நகர் வி.ஆர். மாலில் ட்ரீம் சோன்’ டிசைன் இன்ஸ்டிடூட் சார்பில் இளம் பேஷன் டிசைனர்கள் வடிவமைத்த ஆடைகள் அணிந்து அலங்கார ஆடை அணிவகுப்பு ஒரு வாரம் நடத்தப்பட்டது. இளம் கலைஞர்களை நடிகை யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் பாராட்டினர்.

இந்த ஆண்டு பிளாஸ்டிக் அல்லாத, மாசு இல்லாத பசுமை ஆடைகள் என்ற கருத்தில் ஆடைகள் வடிவமைக்கப்பட்டிருந்தது. இந்த இன்ஸ்டிடூட் மாணவர்கள் இதை உருவாக்கியிருந்தனர்.

சென்னையின் பிரபல இளம் டிசைனர்கள் இதில் பங்கேற்று தங்கள் வடிவமைப்புகளை காட்சிப்படுத்தினர்.

ட்ரீம் சாதனையாளர் விருது, பேஷன் டிசைனராக இருந்து, படிப்படியாக உயர்ந்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு வழங்கப்பட்டது.

ட்ரீம் சோன் கல்லூரி கம்ப்யூட்டரில் பேஷன் வடிவமைப்பு செய்யும் ‘கேட்’ நிறுவனத்தின் அங்கமாகும்.

இது பேஷன் டிசைன், உள் அலங்காரம், கம்ப்யூட்டர் டிசைன், ஜூவல்லரி வடிவமைப்பு, புகைப்பட கலை பயிற்சியளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *