செய்திகள்

டிராக்டர் பேரணி: டெல்லி நோக்கி படையெடுக்கும் விவசாயிகள்

புதுடெல்லி, ஜன.24

டிராக்டர் பேரணியில் கலந்துகொள்வதற்காக ஏராளமான விவசாயிகள் டெல்லி நோக்கி வருகை தந்துகொண்டிருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி புதுடெல்லி நகரின் பல்வேறு எல்லைகளில் பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 59 -வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் சட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் நடைபெற்ற 11 கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததால், விவசாயிகள் குடியரசு தினத்தில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடத்த முடிவு செய்துள்ளனர்.

விவசாயிகளின் டிராக்டர் பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி வழங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து டிராக்டர் பேரணியில் பங்கேற்பதற்காக விவசாயிகள் வந்தவண்ணம் உள்ளதாக பஞ்சாப் கிஷன் சங்கர்ஷ் கமிட்டியைச் சேர்ந்த சதனம் சிங் பனு தெரிவித்துள்ளார். மேலும் டெல்லி வெளிவட்டச் சாலையில் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணி நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *