செய்திகள்

பேர்புரோ வீட்டு வசதி 3 நாள் கண்காட்சி: 21–ந்தேதி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் துவக்குகிறார்

Spread the love

சென்னை, பிப்.14-

‘கிரெடாய்’ அமைப்பு சார்பில் ரியல் எஸ்டேட் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 3 நாட்கள் நடக்கிறது. இக்கண்காட்சியை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் துவக்கி வைக்கிறார்.

இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கங்கள் கூட்டமைப்பின் (‘கிரெடாய்’) தலைவர் (சென்னை) டபுள்யூ.எஸ்.ஹபீப் கூறியதாவது:-

‘கிரெடாய்’ சார்பில் 13-வது ரியல் எஸ்டேட் கண்காட்சி ‘பேர்புரோ–2020’ என்ற தலைப்பில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வருகிற 21ந்தேதி தொடங்கி 23ந்தேதி வரை (3 நாட்கள்) நடக்கிறது. இந்த கண்காட்சியில் 70க்கும் மேற்பட்ட ‘டெவலப்பர்கள்’ 350க்கும் மேற்பட்ட குடியிருப்பு திட்டங்களை காட்சிப்படுத்த உள்ளனர். இதில் ரூ.20 லட்சம் முதல் ரூ.11 கோடிக்கும் மேற்பட்ட விலைகளில் சொகுசு வீடுகள் விற்பனை தொடர்பான அம்சங்கள் இடம் பெற உள்ளன.

நாட்டிலேயே மிகவும் வெற்றிகரமாகவும், நீண்ட காலமாகவும் தொடர்ந்து ரியல் எஸ்டேட் கண்காட்சியை நடத்தி வருகிறோம். இந்த ஆண்டு அதிக எண்ணிக்கையில் ‘டெவலப்பர்கள்’ கலந்து கொள்கிறார்கள். எனவே வாடிக்கையாளர்கள் பல சொத்துகளை வாங்கி குவிப்பதற்கும், முதலீடு செய்வதற்கும் இந்த கண்காட்சி பயன் உள்ளதாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்.

அனைவருக்கும் போதுமான வீட்டுவசதியை வழங்குவதற்காக மத்திய அரசு எடுத்து வரும் முயற்சிகள் மற்றும் திட்டங்களோடு ‘கிரெடாய்’ நெருங்கிய தொடர்பு கொண்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வங்கிகள் பங்கேற்பு

கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளரும், ‘கிரெடாய்’ துணைத் தலைவருமான சிவகுருநாதன் கூறுகையில்,

‘வீடு வாங்குபவர்கள் தங்களுக்கு பொருத்தமான கனவு இல்லங்களை வாங்கலாம். கண்காட்சியில் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, ஐ.சி.ஐ.சி.ஐ., எச்.டி.எப்.சி. ஆகிய வங்கிகள் பங்கேற்கின்றன.

பொருளாதார மந்த நிலை இருப்பதாக கூறப்பட்டாலும், புதிதாக வீடு வாங்குவோர் எண்ணிக்கை, படிப்படியாக உயர்ந்து வருகிறது. சில ஆண்டுகளாக, விலை உயராத நிலையில், இயல்பான அளவில் வீடுகள் விற்பனை நடக்கிறது.

மேலும், இக்கண்காட்சியில், கட்டி முடிக்கப்பட்டு, குடியேற தயாரான நிலையில் பெரும்பாலான வீடுகள் இடம் பெறும். குறைந்த விலை வீடுகளுக்கான வரையறை மாற்றப்பட்டுள்ளதால், ஒரு சதவீதம் ஜி.எஸ்.டி.,யில், மக்கள் வீடுகள் வாங்க முடியும். கட்டுமான நிறுவனங்களின், சேவை குறைபாடு குறித்த புகார்களை தீர்ப்பதற்காக, கிரெடாய் அமைப்பின் குறை நிவர்த்தி பணிகள் குறித்த தனி அரங்கு அமைக்கப்படுகிறது இவ்வாறு அவர் கூறினர்.

இந்தக் கண்காட்சியில் அமைக்கப்படவுள்ள பல்வேறு அரங்குகளின் மூலம் தள்ளுபடி விலையில் தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் விற்பனை, மாதத் தவணை முறையில் வீட்டுமனையைப் பெறும் வசதி, வீடு கட்டித் தரும் நிறுவனங்களை அணுகுதல் ஆகியவை குறித்து பொதுமக்களுக்கு தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும், வீடு கட்டுதல், வீட்டுமனை வாங்க கடன் பெறுதல், சலுகை விலை, குறைந்த முன்பணம் செலுத்தி சொத்துகள் வாங்குதல் ஆகியவை குறித்து கட்டுமானத்துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், வீட்டுமனை விற்பனையாளர்கள் உள்ளிட்டோர் விளக்கம் அளிக்கவுள்ளனர்.

வருமான அடிப்படையில் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் முதல் பல கோடி மதிப்புள்ள 400-க்கும் மேற்பட்ட குடியிருப்புத் திட்டங்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை இந்தக் கண்காட்சி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *