வர்த்தகம்

எல்ஐசியின் புதிய பீமா ஜோதி திட்டத்தில் ஆண்டுதோறும் உத்திரவாதத்துடன் கூடுதல் பலன்

புதுடெல்லி,பிப். 25–

எல்ஐசியின் புதிய பீமா ஜோதி திட்டத்தில் முதலீடு செய்தால் ரூ.1000 முதலீடுக்கு ஆண்டுதோறும் ரூ.50 கூடுதல் பலனாக உத்திரவாதமாக வழங்கப்படுகிறது. இது பங்கு சந்தையுடன் இணையாத லாபத்தில் பங்கேற்காமல் தனி நபர் சேமிப்பு திட்டமாக இருப்பதால் உத்திரவாதமாக கூடுதல் பலன் கிடைக்கிறது. வயது தகுதி 90 நாள் முதல் 60வது வயது வரை குறைந்தபட்சம் ரூ.1 லட்சம் முதலீடும் அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். பாலிசி காலம் 15 முதல் 20 ஆண்டுகள் என தேர்வு செய்யலாம். வங்கி சேமிப்புக்கு வட்டி குறைந்து வரும் நிலையில் ஆயுள் காப்பீட்டுடன் ஆண்டுதோறும் பலன் கிடைப்பதால் இதை மக்கள் விரும்புவர் என்று தென் மண்டல மேலாளர் கே.கதிரேசன் தெரிவித்தார்.

முதலீடுக்கு பாதுகாப்பு, ஆயுளுக்கும் பாதுகாப்பு, எந்த பங்கு சந்தையிலும் முதலீடு செய்யப்படாத திட்டமாக இது செயல்படும். இதை www.licindia.in வலைதளம் மூலம் ஆன்லைனிலும் பாலிசி வாங்கலாம். ஏஜெண்ட்கள் மூலமும் வங்கி கிளைகளிலும் இந்த பாலிசியை வாங்கலாம் என்றார் அவர்.

இத்திட்டத்தில் பாலிசிதாரர் இறக்க நேரிட்டால், இன்சூரன்ஸ் தொகையுடன், சேர்ந்துள்ள உத்திரவாத தொகையும் சேர்த்து வாரிசுகளுக்கு வழங்கப்படும்.

பாலிசி காலம் முடிந்து, பாலிசிதாரருக்கு இந்த தொகை வழங்கப்படும்.

பிரிமீயத்தை ஆண்டுக்கு ஒரு முறை, அரையாண்டு, காலாண்டு மாதாந்திர சம்பள பிடித்தம் மூலம் தவணையில் செலுத்தலாம் என்றார் கே. கதிரேசன்.

லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா, பீமா ஜோதி என்ற ஆயுள் காப்பீடு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. லைப் இன்சூரன்ஸ் கார்பரேஷன் ஆப் இந்தியா, பீமா ஜோதி என்ற பாதுகாப்பு மற்றும் சேமிப்பு இணைந்த தனிநபர் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த பாலிசிகளை முகவர்கள் அல்லது இடைத்தரகர்கள் மூலம் ஆப்லைனிலும், www.licindia.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனிலும் வாங்கலாம். இந்த திட்டத்தின் கீழ் வாங்கப்படும் பாலிசியின் ஒவ்வொரு ஆண்டு முடிவிலும், பாலிசி தொகையில் ஆயிரம் ரூபாய்க்கு 50 கூடுதல் தொகை வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தில் குறைந்தபட்சமாக 1,00,000மும், அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை. இந்த பாலிசியை பொருத்தமட்டில், பாலிசியில் காலத்தில் 5 ஆண்டுகளை கழித்து விட்டு, விரும்பிய தொகையை உறுதி பணமாக அடைய மாதம் எவ்வளவு பிரீமியம் செலுத்த வேண்டும் என்பதுடன் 15 முதல் 20 ஆண்டுகள் வரையிலான கால கட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம். இந்த பாலிசியில் சேர குறைந்தபட்ச வயதாக 90 நாட்கள் முடிவடைந்திருக்க வேண்டும். அதிகபட்சமாக 60 வயது வரை சேரலாம். இதற்கான பிரீமியம் தொகையை ஒவ்வொரு மாதம், காலாண்டு, அரையாண்டு, ஆண்டு என குறிப்பிட்ட இடைவெளியில் செலுத்தலாம். தற்போதைய சூழலில், வட்டி விகிதம் வேகமாக சரிந்து வரும் நிலையில், இத்திட்டத்தில் உத்தரவாத கூடுதல் தொகை அளிப்பது ஒரு முக்கிய சிறப்பம்சமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *