செய்திகள்

இ.ஐ.டி பாரி சிறப்பான செயல்பாடு நிர்வாக இயக்குனர் எஸ். சுரேஷ் பெருமிதம்

Spread the love

சென்னை, நவ. 8–

நாடு முழுவதும் 8 சர்க்கரை ஆலைகளுடன் சர்க்கரை உற்பத்தியில் முன்னணியில் உள்ள இ.ஐ.டி. பாரி இந்தியா நிறுவனம், 4 டிஸ்ட்டிலரிகளை கொண்டுள்ளது. இதற்கு அமெரிக்காவில் இயற்கை மருந்து தயாரிப்பு நிறுவனம் நிறுவி உள்ளது. கோரமண்டல் உர, விவசாய நிறுவனம் இதன் சார்பு நிறுவனமாகும். சர்க்கரை துறையில் தேக்க நிலையால் இந்நிறுவனம் பாதிக்கப்பட்டது. சர்க்கரை உற்பத்தி செலவு அதிகரித்தது. கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் ‘வெள்ளத்தால் இதன் சர்க்கரை விற்பனை பாதிக்கப்பட்டது என்று இதன் நிர்வாக இயக்குனர் எஸ். சுரேஷ் தெரிவித்தார்.

சர்க்கரை தொழில்துறை வளர்ச்சிக்கு மத்திய – மாநில அரசுகள் உதவி வருகிறது. இது அடுத்த 2 காலாண்டுகளில் கம்பெனி வளர்ச்சிக்கு உதவும் என்றார் அவர்.

இ.ஐ.டி. பாரி 2வது காலாண்டில் (ஜூன் முதல் செப்டம்பர் வரை) ரூ.442 கோடி வர்த்தகம் புரிந்துள்ளது. இதன் சார்பு நிறுவனம் கோரமண்டல் இறுதி டிவிடெண்டாக ரூ.62 கோடி வழங்கியது. இதன் மொத்த லாபம் ரூ.51 கோடியாகும் என்றார் அவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *