செய்திகள்

சிட்டி யூனியன் வங்கி சிறப்பான செயல்பாடு; லாபம், டெபாசிட், வழங்கிய கடன் உயர்வு

Spread the love

சென்னை, பிப். 13–

தனியார் துறை வங்கியில் முன்னணி வங்கியாக டிஜிட்டல் மயமான சிட்டி யூனியன் வங்கி சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதன் லாபம், டெபாசிட், வழங்கிய கடன் உயர்ந்துள்ளது. வங்கிகள் கடுமையான சவால்களை சந்தித்து வந்தாலும் திறமையாக செயல்பட்டு வருகிறது. இதன் மொத்த வர்த்தகம் ரூ.73 ஆயிரத்து 640 கோடியாக உயர்ந்துள்ளது. இதன் லாபம் ரூ. 572 கோடியாக அதிகரித்துள்ளது. என்று இதன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி என்.காமகோடி தெரிவித்தார்.

கும்பகோணத்தில் தலைமை அலுவலகத்தை கொண்டு செயல்படும் சிட்டி யூனியன் வங்கி 2019–20ம் நிதியாண்டின் மூன்றாம் காலாண்டு மற்றும் ஒன்பது மாத முடிவுகள் வங்கியின் நிர்வாக இயக்குனர் அண்ட் முதன்மை செயல் அதிகாரி என்.காமகோடி வெளியிட்டார். மேலும் வங்கியின் வளர்ச்சி மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றியும் தெரிவித்தார்.

வங்கி, நடப்பு நிதியாண்டின் மூன்றாம் காலாண்டின் கடந்த வருட ஒத்த காலாண்டை விட மொத்த வருமானம் 11% உயர்ந்து ரூ.1203 கோடியாகவும் இதர வருமானம் 19% உயர்ந்து ரூ.142 கோடியாகவும் அதிகரித்துள்ளது. நிகர லாபம் 8% உயர்ந்து ரூ.192 கோடியாகவும் உள்ளது என்றார் அவர்.

நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாங்களில் வங்கியின் மொத்த வியாபாரம் கடந்த ஆண்டை விட 11% உயர்ந்து ரூ.73,640 கோடியாகவும் அதிகரித்துள்ளதாகவும், வங்கியின் வைப்பு தொகை (டிபாசிட்) மற்றும் கடன்கள் (அட்வான்ஸ்) கடந்த ஆண்டை விட முறையே 12%, 10% உயர்ந்து ரூ.39,812 கோடியாகவும், ரூ.33,828 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் டிசம்பர் மாதத்துடன் முடிந்த ஒன்பது மாங்களில் வங்கியின் மொத்த வருமானம் 15% உயர்ந்து ரூ.3628 கோடியாகவும், இதர வருமானம் 36% உயர்ந்து ரூ.501 கோடியாகவும் அதிகரித்துள்ளது. நிகர லாபம் 13% உயர்ந்து ரு. 572 கோடியாகவும் அதிகரித்துள்ளது என்றார்.

வங்கியின் நிகர வராக் கடன் 1.95% ஆகவும் வங்கியின் சொத்தின் மீதான வருவாய் 1.57% ஆகவும் உள்ளது. வங்கியின் நிகர மதிப்பு கடந்த ஆண்டில் இருந்த மதிப்பான ரூ.4,621 கோடியில் இருந்து ரூ.5, 335 கோடியாகவும் உயர்ந்துள்ளது. வங்கியில் 665 கிளைகள் மற்றும் 1,762 தானியங்கி பட்டுவாடா யந்திரங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

சிட்டி யூனியன் வங்கியில் 9 மாதத்தில் இதன் டெபாசிட் ரூ.39812 கோடியாக உயர்ந்துள்ளது. வங்கி கடன் ரூ.33828 கோடியாக உள்ளது. முதலீடுகள் ரூ.9098 கோடியாக உயர்ந்துள்ளது. நிகர மதிப்பு ரூ.5334 கோடியாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *