செய்திகள்

சோழிங்கநல்லூர் தொகுதியில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ரொட்டி

அம்மா உணவகங்களுக்கு ரூ.21.66 லட்சம், நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம்

சோழிங்கநல்லூர் தொகுதியில் 15 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ரொட்டி

முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன் வழங்கினார்

 

சென்னை, மே 25–

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதியில் உள்ள 15 ஆயிரம் குடும்பங்களுக்கு முதல் கட்டமாக தலா 5 கிலோ அரிசி, பெரிய ரொட்டி பாக்கெட் ஆகியவைகளை இன்று சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. செயலாளருமான கே.பி.கந்தன் வழங்கினார்.

அனைவரும் சமூக இடைவெளி விட்டு முகக்கவசம் அணிந்து நிவாரண பொருட்களை மகிழ்ச்சியுடன் எந்தவித சிரமமும் இன்றி வாங்கி சென்றார்கள்.

அண்ணா தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஆணைக்கிணங்க காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட சென்னை மாநகராட்சி 14வது மண்டலம், 184வது வட்டத்தில் உள்ள கல்லுக்குட்டையில் உள்ள 10 நகர்கள் மற்றும் அண்ணா நகர் பிள்ளையார் கோவில் தெரு, கோவிந்தசாமி நகர், சந்தியப்பன் சாலை, கோதண்டராமர் நகர், டாக்டர் அம்பேத்கர் புரட்சி நகர், திருவள்ளுவர் நகர், வடக்கு கே.பி.கே. நகர், சி.பி.ஐ. காலனி, திருவள்ளுவர் தெரு, நேதாஜி நகர், டெலிபோன் நகர், அஞ்சுகம் அம்மையார் நகர், ராணுவ குடியிருப்பு, சந்தியா நகர் விரிவு, சந்தியா நகர், செம்பொன் நகர், மேற்கு கே.பி.கே. நகர், அண்ணல் அம்பேத்கர் நகர், பெருந்தலைவர் காமராஜர் நகர், ஜெ.ஜெ. நகர், ஜி.கே.மூப்பனர் தெரு ஆகிய இடங்களில் உள்ள 15 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் கட்டமாக இன்று சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. செயலாளருமான கே.பி.கந்தன், 184வது வட்டச் செயலாளர் எம்.வெங்கடேசன் ஆகியோர் தங்கள் சொந்த செலவில் 5 கிலோ அரிசி, மற்றும் பிரட் ஆகியவைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. அவைத்தலைவர் வி.குமார், 186வது வட்டச் செயலாளர் ஜி.எம்.ஜானகிராமன், 183–வது வட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, பெருங்குடி, பேரூர் கழக மகளிர் அணிச் செயலாளர் வி.அமுதா வெங்கடேசன், மடிப்பாக்கம் கார்த்திகேயபுரம் கூட்டுறவு கட்டிட சங்கத் தலைவர் உள்ளகரம் பி.ரஞ்சித்குமார், 184–வது வட்ட பொருளாளர் கே.குமார், 184–வது வட்ட இணைச்செயலாளர் கே.கோமளா, துணைச் செயலாளர்கள் பி.ஆனந்தி, எம்.சேகர், மேலமைப்புப் பிரதிநிதி இ.சுரேஷ், தயாளன், வெல்டிங் சேகர், எஸ்.சுரேஷ், எல்.செந்தில்குமார், பி.சிவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம்

சோழிங்கநல்லூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. செயலாளருமான கே.பி.கந்தன் மார்ச் 30–ந் தேதி அன்று கொரோனா நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சம் வழங்கி உள்ளார்.

அம்மா உணவகத்துக்கு ரூ.22 லட்சம்

சோழிங்கநல்லூர் மேற்கு பகுதிக்கு உட்பட்ட 22 இடங்களில் உள்ள அம்மா உணவகங்களில் 23.4.20 அன்று முதல் 17.5.20 அன்று வரை விலையில்லா உணவு வழங்கிட சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி அண்ணா தி.மு.க. செயலாளர் கே.பி.கந்தன் ரூ.21 லட்சத்து 66 ஆயிரத்து 114 வழங்கியுள்ளார். இதனால் 2 லட்சத்து 10 ஆயிரத்து 868 ஏழை எளியோர் பயன் அடைந்துள்ளனர்.

அத்துமீறும் சீனாவுக்கு அமெரிக்கா கண்டனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *