செய்திகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி

திருவண்ணாமலை, மார்ச் 10–

திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக ஒதுக்கீடு செய்யும் பணிகள் கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் சட்டமன்ற பொதுத் தேர்தல் -2021 முன்னிட்டு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல் கட்டமாக மேற்கொள்ளும் பணிகள் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி பேசியதாவது:

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 10,713 வாக்குப்பதிவு இயந்திரங்கள் (3465 வாக்குப்பதிவு இயந்திரகள், 3465 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 3783 வாக்குப்பதிவு உறுதி செய்யும் இயந்திரங்கள்) அனுப்புவதற்கான இன்று மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திர கிடங்கிலிருந்து அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் இன்று முதல் நடைபெறவுள்ளது. இதன்படி வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள வலுவான அறையில் சிசிடிவி வசதி மற்றும் காவல் துறை பாதுகாப்புடன் வைக்கப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி, அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், திருவண்ணாமலை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் அனைத்து துணை காவல் கண்காணிப்பாளர்களுடன், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, தேர்தல் நடத்தை விதிமுறைகள், வேட்பாளர் மனுதாக்கல், வாக்குப் பதிவு, வாக்கு எண்ணிக்கை உட்பட தேர்தல் தொடர்பான அனைத்து பணிகள் மேற்கொள்வது தொடர்பான விரிவான ஆய்வுக் கூட்டம் நடத்தினார். ஆய்வுக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா. முத்துகுமரசாமி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அசோக்குமார் மற்றும் தேர்தல் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *