செய்திகள்

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ரூ.280 கோடிக்கு பங்குகளை 20ந் தேதி வெளியிடுகிறது

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி ரூ.280 கோடிக்கு பங்குகளை 20ந் தேதி வெளியிடுகிறது

* ஒரு பங்கு விலை ரூ.32, 33 ; ஏலத்தில் விற்பனை

* 35% சிறு முதலீட்டாளருக்கு ஒதுக்கீடு

தலைமை செயல் அதிகாரி பி.என். வாசுதேவன் தகவல்

சென்னை, அக்.17

ஈக்விடாஸ் சிறு நிதி வங்கி 2019ம் நிதி ஆண்டு நிலவரப்படி, கிளைகளின் எண்ணிக்கை, நிர்வகிக்கும் சொத்து மற்றும் மொத்த டெபாசிட்கள் அடிப்படையில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய சிறு நிதி வங்கி ஆகும். இது, ரூ.10 முகமதிப்பு கொண்ட சமபங்குகளின் புதிய பங்கு வெளியீட்டை அக்டோபர் 20ந் தேதி துவங்கி 22ந் தேதி நிறைவு பெறுகிறது என்று இதன் தலைமை செயல் அதிகாரி பி.என். வாசுதேவன் தெரிவித்தார்.

பங்கின் விலைப்பட்டை, சமபங்கு ஒன்றுக்கு ரூ. 32 முதல் ரூ.33 என நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. பொது மக்களுக்கான புதிய பங்கு விற்பனையில் இந்த நிறுவனத்தின் புதிய பங்குகள் ரூ.280 கோடி விற்பனை செய்யப்படுகிறது. மற்றும் பங்குச்சந்தை மூலமான விற்பனையில், நிறுவனர் விற்கும் பங்குகள், ஈக்விட்டாஸ் ஹோல்டிங்ஸ் 7 கோடியே 20 லட்சம் பங்குகள் விற்பனை செய்யப்படுகிறது.

இந்தப் பங்கு விற்பனையில் மொத்தம் ரூ.51 கோடி மதிப்புள்ள பங்குகள், தகுதியான ஈ.ஹெச்.எல். பங்குதாரர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. மற்றும் ரூ.

1 கோடி மதிப்புள்ள பங்குகள், தகுதியான ஊழியர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. குறைந்தபட்சம் 450 சமபங்குகளுக்கு ஏலம் கேட்க வேண்டும். அதன் பின்னர் 450 பங்குகளின் மடங்குகளில் ஏலம் எடுக்கலாம்.

இந்த சம பங்குகள் மும்பை மற்றும் நேஷனல் பங்கு சந்தை ஆகிய இரண்டிலும் பட்டியலிடப்படும். ஜே.எம். பைனான்ஸியல், எடெல்வைஸ் பைனான்சியல் மற்றும் ஐ.ஐ.எப். எல்செக்யூரிட்டீஸ் ஆகியவை இந்தப் பங்கு விற்பனைக்கு முன்னணி மேலாளர்களாக செயல்படுகின்றனர். மொத்தப் பங்கு வெளியீட்டில் 15 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் நிறுவனம் சாராத முதலீட்டாளர்களுக்கும், 35 சதவிகிதத்துக்கு குறையாமல் விகிதாச்சார அடிப்படையில் சிறு தனி நபர் முதலீட்டாளர்களுக்கும் பங்குகள் ஒதுக்கப்படும்.

இந்த முறையில் பங்குகள், ஒதுக்கீடு செய்யப்பட்டால் மட்டுமே முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும். அதே நேரத்தில், விண்ணப்பத்துக்கான தொகை முதலீட்டாளர் வங்கி கணக்கில், முடக்கி வைக்கப்பட்டிருக்கும். பங்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், முதலீட்டாளர் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்படும் என்றார் பி.என். வாசுதேவன்.

இது பற்றி அறிய www.equitas.com என்ற வலைதளம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *