செய்திகள்

மாவட்ட அண்ணா தி.மு.க. நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி–ஓ.பி.எஸ். ஆலோசனை

Spread the love

சென்னை,பிப்.15–

அண்ணாதிமுக தலைமை கழகத்தில் இன்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

அண்ணா.தி.மு.க. மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் இன்று காலை மீண்டும் தொடங்கியது. கடந்த 10 -ந் தேதி முதல் மாவட்ட வாரியாக அண்ணா.தி.மு.க. நிர்வாகிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சந்தித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வந்தனர்.

சட்டசபை கூட்டம் நடைபெற இருந்த காரணத்தால் கடந்த 2 நாட்களாக ஆலோசனை கூட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இன்று மீண்டும் மாவட்ட நிர்வாகிகளை அழைத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தினார்கள்.

துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் எம்.பி., அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இன்றைய கூட்டத்தில் திருநெல்வேலி மாநகர், புறநகர், காஞ்சிபுரம் மத்திய கிழக்கு, மேற்கு மாவட்டங்கள், வேலூர் கிழக்கு, மேற்கு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் விடுபட்ட 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்கள் வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளதால் அதற்கு தயார்படுத்த அண்ணா.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாக தெரிகிறது. தேர்தலில் வெற்றி பெற கடுமையாக பாடுபட வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.

இன்று மாலையிலும் தலைமை கழகத்தில் 7 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் விழுப்புரம் வடக்கு, தெற்கு, வட சென்னை கிழக்கு, மேற்கு, தெற்கு தென்சென்னை வடக்கு, தெற்கு ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *