செய்திகள்

ராயபுரம் மனோ மகன் திருமணம்: எடப்பாடி, ஓ.பி.எஸ். நேரில் வாழ்த்து

சென்னை, மார்ச் 3–

ராயபுரம் மனோ மகன் திருமண விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ராயபுரம் மனோவின் மூத்த மகன் எம்.தருண் – ஏ.கீர்த்தனா திருமணம் திருவேற்காட்டில் உள்ள ஜிபிஎன் பேலஸ் திருமண மண்டபத்தில் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேரில் வந்து பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

தமிழக அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், எம்.சி.சம்பத், பா.பென்ஜமின், க.பாண்டியராஜன், முன்னாள் அமைச்சர் எஸ்.கோகுல இந்திரா, சட்டமன்ற உறுப்பினர்கள் விருகை ரவி, தி.நகர் சத்யா, நா.பாலகங்கா, ஆர்.எஸ்.ராஜேஷ்,

வி.அலெக்சாண்டர், அமைப்பு செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.குப்பன், உள்ளிட்டோர் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருநாவுக்கரசு, பாட்டாளி மக்கள் கட்சி ஏ.கே.மூர்த்தி, சௌமியா அன்புமணி, ராதாகிருஷ்ணன், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் உள்ளிட்ட ஏராளமான அரசியல் கட்சி பிரமுகர்கள், காவல்துறை அதிகாரிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணத்திற்கு வந்தவர்களை ராயபுரம் மனோ குடும்பத்தினர் வரவேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *