செய்திகள்

30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்: எடப்பாடி வழங்கினார்

ஸ்கூட்டர், தையல் மெஷின், சைக்கிள், தள்ளுவண்டி

30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள்:

எடப்பாடி வழங்கினார்

முதல்வருக்கு மாவட்ட செயலாளர் ராஜேஷ் தலைமையில் உற்சாக வரவேற்பு

சென்னை பிப்.25– –

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73 வது பிறந்த நாளை யொட்டி வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட அண்ணா தி.மு.க. சார்பில் ஆர்.கே.நகர் பகுதி கொருக்குப்பேட்டை எழில் நகர் பகுதியில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கழக செயலாளரும் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் தலைமையில் நடைபெற்றது.

இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கழக அவைத்தலைவர் இ.மதுசூதனன், மண்டல பொறுப்பாளர் ஜே.சி.டி.பிரபாகர், ஆர்.எஸ். ராஜேஷ், ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த நலிந்த பெண்களுக்கு மாவு அரைக்கும் நவீன மெஷின், ஏழை எளிய பெண்களுக்கு தையல் இயந்திம், கட்சி பணிகளுக்காக பாடுபட்ட தொண்டர்களுக்கு இரு சக்கர வாகனம், ஊனமுற்றவர்களுக்கு மூன்று சக்கர வண்டிகள் உள்ளிட்ட பொருட்களை நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி தொடங்கி வைத்தார்.

விழாவில் முதலமைச்சருக்கு ஆர்.எஸ்.ராஜேஷ், முருகர் சிலை மற்றும் வேல், சிம்மாசனம், ஆகியவைகளை நினைவு பரிசாக வழங்கினார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டையார்பேட்டை, சேனியம்மன் கோவில் தெரு, கைலாசம் தெரு, வைத்தியநாதன் மேம்பாலம், கொருக்குப்பேட்டை, எழில் நகர், அண்ணா நகர், ஆகிய இடங்களில் வழி நெடுக முதல்வர், துணை முதல்வரின் படங்கள், அடங்கிய பதாகைகளுடன், கொடி, தோரணங்கள், செண்டை மேளம், தாரை, தப்பட்டை, பேண்டு வாத்தியங்கள், முழங்கியது. பொதுமக்கள் பூச்செண்டு கொடுத்தும் பூக்கள் தூவி ஆரத்தி எடுத்தும் பூரண கும்ப மரியாதை செய்து இரட்டை இலை சின்னத்தை இரு விரல்களால் காட்டி கரகோஷம் எழுப்பி காண்பித்தனர்.

மேலும் அப்பகுதி முழுக்க வண்ண சீரியல் பல்புகள் மற்றும் அலங்கார இரட்டை இலை மின்விளக்குகள் அமைத்து விழா கோலத்துடன் காணப்பட்டது.

ஆர்.கே.நகர், மற்றும் பெரம்பூர் பகுதி மக்கள் வரவேற்பு வழங்கி உற்சாகத்துடன் ஜெயலலிதாவுக்கு வழங்கிய அதேப்போன்று ஏழுச்சியுடன் கூடிய வரவேற்பை முதல்வருக்கு அளித்தனர்.

பொதுக்கூட்டத்தில் இரு சக்கர ஸ்கூட்டர் 25 நபர்களுக்கும், மகளிர் குழுக்களுக்களை சேர்ந்த ஏழை பெண்கள் 50 பேருக்கு நவீன கிரைண்டர் மெஷின், 500 – பெண்களுக்கு தையல் மெஷின், 100 நபர்களுக்கு டவர் மின்விசிறி, இட்லி குண்டான் 500 நபர்களுக்கும், அன்னக்கூடை 500 பேருக்கும், நலிந்த சலவை தொழிலாளர்கள் 100 பேருக்கு இஸ்திரி பெட்டி, மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுக்கு 100 ஸ்டீல் டேபிள், பூ வியாபாரம் செய்யும் நடைபாதை வியாபாரிகளுக்கு 100 ஸ்டீல் மேசை, 100 கிரிக்கெட் குழுக்களுக்கு பேட், ஸ்டெம்ப், பால் அடங்கிய கிட், சைக்கிள் மிதி வண்டி 100 நபர்களுக்கும், மீன் பாடி வண்டி 50 பேருக்கும்,

தள்ளு வண்டி 50 பேருக்கும், டிபன் வண்டி 50 பேருக்கும், உடல் ஊனமுற்றவர் வண்டி 16 பேருக்கும், மகளிர் குழுக்களை சேர்ந்த 15 ஆயிரம் பெண்களுக்கு ஹாட் பாக்ஸ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையை சேர்ந்த 6669 உறுப்பினர்களுக்கு டி-சர்ட், மற்றும் டிராக் பேண்ட், ஆட்டோ டிரைவர்கள் 500 பேருக்கு காக்கி பேண்ட் – சட்டை யூனிபார்ம், மற்றும் ஏழைகளுக்கு வேட்டி, சேலை, உள்ளிட்ட 30 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கழக மாணவரணி மாநில செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், கழக செய்தி தொடர்பாளர் சசிரேகா, ஆர்.கே.நகர் பகுதி கழக செயலாளர்கள் ஆர்.எஸ். ஜெனார்தனம், ஆர்.நித்தியானந்தம், எம்.என். சீனிவாச பாலாஜி, மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், பெரம்பூர் பகுதி கழக செயலாளர்கள் வியாசை எம்.இளங்கோவன், என்.எம்.பாஸ்கரன், மற்றும் அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் இ.எஸ். சதீஷ்பாபு உள்ளிட்ட சுமா‌ர் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *