செய்திகள்

காஞ்சீபுரத்தில் 12ந்தேதி தொழில் முனைவோர் விளக்க கூட்டம்: கலெக்டர் தகவல்

Spread the love

காஞ்சீபுரம், நவ. 9–

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழில் முனைவோருக்கான விளக்கக் கூட்டம் 12-ம் தேதி நடைபெறும் என மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்தார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தொழில் நிறுவனங்களும், புதிய தொழில் முனைவோரும் ஒருங்கிணைந்து அறிந்து கொள்ளும் வகையில் மாவட்ட கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் 12-ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தின் 2-வது மாடியில் இக்கூட்டம் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர், புதிதாகத் தொழில் தொடங்க ஆர்வமுள்ளோர், முதல் தலைமுறை தொழில் முனைவோர் தாங்கள் வாங்க உள்ள யந்திரத்திற்கான விலைப்புள்ளிகள், புகைப்படம், கல்வித் தகுதி, ஆதார் அட்டை, குடும்ப அட்டை உள்ளிட்டவற்றை நேரில் கொண்டு வந்து பதிவு செய்யலாம்.

மாவட்டத் தொழில் மையத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இக்கூட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வமுள்ள அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு பொது மேலாளர், மாவட்டத் தொழில் மையம், காஞ்சீபுரம் என்ற முகவரியிலோ அல்லது 044-27238837, 27238551 ஆகிய தொலைபேசி எண்களிலோ அணுகி பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *