வர்த்தகம்

விஸ்ட்லிங் உட்ஸ் கல்வி நிறுவனம் சார்பில் திரைப்படத் துறை படிப்பு நுழைவு தேர்வு

சென்னை, பிப்.20

திரைப்படத் துறை சார்ந்த டிப்ளமோ, பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கான முதல் சுற்று நுழைவுத் தேர்வுகளை, மார்ச் 2ந் தேதி முதல் 4ந் தேதி வரை ஆன்லைனில் மும்பை விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் கல்வி நிறுவனம் நடத்துகிறது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கக் கடைசித் தேதி, பிப்ரவரி 27. இந்த நிறுவனம் ராஜீவ் காந்தி நேஷனல் இன்ஸ்டிட்டியூட் மற்றும் டாடா சோசியல் சயின்சஸ் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, இந்தப் பயிற்சிகளை இணையம் வழியாகவே நடத்துகிறது.

திரைப்படம் தவிர கம்யூனிக்கேஷன் மற்றும் கிரியேட்டிவ் ஆர்ட்ஸ் போன்ற பிரிவுகளிலும் படிப்புகள் உள்ளன. இதற்கான விண்ணப்பப் படிவம் www.whistlingwoods.net என்ற இக்கல்லூரியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாணவர்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அனுப்பவேண்டும்.

நுழைவுத் தேர்வுகள் கீழ்க்கண்ட பாடப் பிரிவுகளுக்கு நடத்தப்பட உள்ளன.ஹாலிவுட் ரிப்போர்ட்டர்’ இதழால் உலகின் சிறந்த 10 திரைப்படப் பள்ளிகளில் ஒன்றாக விஸ்ட்லிங் உட்ஸ் இன்டர்நேஷனல் மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வி நிறுவனத்தில், இதுவரை 2500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பயிற்சிகளை நிறைவு செய்துள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள வெவ்வேறு ஊடக நிறுவனம்திரைப்படத் தயாரிப்பு நிறுவனம், ஃபேஷன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *