வாழ்வியல்

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொண்டால்…. கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடையலாம்

உடலில் உள்ள நச்சை அழிக்க உடற்பயிற்சி உதவுகிறது.

கொரோனா ஊரடங்கால் பெரும்பான்மையோர் வீட்டிலேயே இருக்கின்றனர். வீட்டில் இருக்கும் காரணத்தால் சாப்பிடுவதை மட்டும் வேலையாக வைத்துக்கொண்டு மற்ற நேரத்தில் சும்மா உட்கார்ந்துகொண்டு இருக்கக் கூடாது. நன்றாகச் சாப்பிட்டுவிட்டு எந்த வேலையோ அல்லது உடற் பயிற்சியோ செய்யாமல் இருந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்திதான் முதலில் குறையும். மேலும் நீரிழிவு, இதய நோய் போன்ற பிரச்சினைகள் உருவாகும்.

உடற்பயிற்சி, வீட்டு வேலைகளைச் செய்யாமல் இருந்தால் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்து செல்கள் பாதிக்கப்படும். இதனால் கண்டிப்பாக உடலுக்குப் பயிற்சி அளிக்கக் கூடிய வேலைகளைச் செய்யவேண்டும்.

அதேபோல் தொடர்ந்து காலை ஆறு மணிக்கு எழுந்துகொண்டால் மலச்சிக்கல் பிரச்சினை வராது. ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதனால் மட்டுமே அது சாத்தியமாகும்.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவாகக் குணமடையலாம் என்பது கொரோனா பாதிப்பிலிருந்து விரைவாகக் குணமடைந்தவர்களிடம் கிடைத்த விரங்களை ஆய்வு செய்தபோது கண்டறியப்பட்டுள்ளது.

உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் அனைத்து நோய்த் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் கேடயமாகும். அதிலும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மருந்துகள் கண்டுபிடிக்காத நிலையில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்திதான் தற்போது கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் மருந்தாக உள்ளது. மருத்துவமனைகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப் பட்டவர்களுக்குத் தற்காலிக மருந்துகளுடன் ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளும் வழங்கப்படுகிறது.

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து விரைவாகக் குணமடைந்துவிட முடியும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *