செய்திகள்

குடிபோதையில் நண்பன் பிளேடால் அறுத்துக் கொன்ற வாலிபர் கைது

Spread the love

சென்னை, ஜன. 14–

குடிபோதையில் நண்பனை பிளேடால் அறுத்துக் கொலை செய்த நபரை போலீசார் மயிலாப்பூரில் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் பல்லக்குமா நகர் வி பிளாக்கைச் சேர்ந்தவர் மோகன் (வயது 50). அதே பகுதியில் எஸ் பிளாக்கில் வசித்து வருபவர் லோகேஷ் (25) என்கிற இஸ்திரி லோகேஷ். இருவரும் நேற்று இரவு 11 மணியளவில் பல்லக்குமாநகரில் ஒன்றாக அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்தனர். இருவருக்கும் இடையில் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் இருந்துள்ளது. அதன் காரணமாக திடீரென இருவருக்கும் இடையில் திடீரென தகராறு ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த லோகேஷ் தான் வைத்திருந்த பிளேடால் மோகனை காது, கழுத்து, கை, கால் ஆகிய இடங்களில் சரமாரியாக கிழித்துள்ளார். இதனால் மோகன் அதே இடத்தில் ரத்தவெள்ளத்தில் சரிந்தார். அங்கிருந்த நபர்கள் மீட்டு சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் கிடைத்ததும் மயிலாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். மோகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து லோகேஷை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *