செய்திகள்

காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் டிரம்மர் சிவமணி சாமி தரிசனம்: மூலவர் முன்பு இசை கருவிகளை வாசித்தார்

காஞ்சீபுரம், நவ.22-

காஞ்சீபுரம் ராஜகுபேரர் கோவிலில் இசைக் கலைஞர் டிரம்மர் சிவமணி சாமி தரிசனம் செய்து கோவில் நிறுவனர் சிவஸ்ரீ தேவராஜ குபேர சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை காஞ்சீபுரம் அருகே குபேரப்பட்டிணத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ ராஜகுபேரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வியாழன் மற்றும் பௌர்ணமியன்று குபேரருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு, இசை வாத்தியங்களுடன் விசேஷ அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். உள்ளூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருகை தந்து குபேரரை வழிபட்டு செல்கின்றனர்.

இந்நிலையில், உலக பிரசித்தி பெற்ற இசை கலைஞர் கலைமாமணி டிரம்மர் சிவமணி, ராஜகுபேரர் கோவிலுக்கு வருகை தந்து, ராஜகுபேரரை மனமுறுகி தரிசனம் செய்தார். பிறகு அவர் கோவில் நிறுவனர் தவத்திரு சிவஸ்ரீ தேவராஜ குபேர சுவாமிகளிடம் ஆசி பெற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *