சினிமா

போலி பதிவு திருமணங்கள்: தோலுரித்தாள் ‘திரௌபதி’!

தமிழின் முதல் ‘க்ரவுட் ஃபண்ட்’ சினிமா, ‘திரௌபதி’

* ஆயிரக்கணக்கில் சாதிகள் இருந்தாலும், லட்சக்கணக்கில் சாதி சான்றிதழ்கள் இருந்தாலும், கோடிக்கணக்கான ரூபாயில் சாதி சலுகைகள் வழங்கப்பட்டாலும் “சாதிகள் இல்லையடி பாப்பா” என்ற பொய்யை திரும்ப திரும்ப திணித்து வந்த தமிழ் சினிமாக்கள் மத்தியில் “சாதிகள் உள்ளதடி பாப்பா” என உண்மையை திடமாக வெளிப்படுத்தியவள் திரௌபதி,

* காதல் நாடகங்களை பார்த்து வளர்ந்த சினிமா ரசிகர்களிடம் காதலையே நாடகமாக செய்வோரை அம்பலப்படுத்தியவள்.

* சின்ன பட்ஜெட் படங்களுக்கு தியேட்டரே கிடைக்காது என்ற லாஜிக்கை தவிடுபொடியாக்கி பெரும் எண்ணிக்கையிலான தியேட்டர்களில் குடிகொண்டவள்.

* சாதி அடையாளம் இருந்திடாம பாத்துக்கனும்; இல்லேன்னா படம் ஓடாதென இதுவரை இருந்து வந்த நடைமுறையை நகைச்சுவையாக்கியவள்.

* பல சமுதாய தலைவர்களின் படங்களோடும் பேனரோடும், பல அரசியல் கட்சிகளின் ஆதரவோடும் அங்கீகரிப்போடும் வெளிப்படையாகவே வெளிவந்து வெற்றிபெற்றவள்.

* 3500 போலிப் பதிவு திருமணங்கள் பற்றி பதிவு செய்தவள்,

* தியேட்டர் விநியோகம் என்றால் என்னவென்ற தெரியாத பலரையும் இன்று புதிய லாபமிக்க விநியோகஸ்தர்களாக உருவாக்கியவள்.

* மகளிர் மட்டும் பேருந்தை பார்த்த இந்த சமுகத்திற்கு மகளிர் மட்டும் திரையரங்கு காட்சிகளை அறிமுகப்படுத்தியவள்.

* பெண்களின் உணர்வுகளைக் காட்டி வெளிவந்தவள்.

* இயக்குனர், வெளியீட்டாளர், விநியோகஸ்தர், நட்சத்திரங்கள், தியேட்டர் உரிமையாளர்கள் என அத்தனை பேர் முகத்திலும் புன்னகை மலரச் செய்தவள்.

* நாடக காதல் செய்து பலியாகும் அடிமைசாதி ஆண்கள் மட்டும் பாவப்பட்டவர்கள் அல்ல, நாடககாதலால் பலியாகும் ஆதிக்க சாதி பெண்களும் பாவப்பட்டவர்கள் தான் என சமுகத்திற்கு உணர்த்தியவள்.

* இனி பதிவாளர் அலுவலத்தில் இடைத்தரகர்கள் நுழைய தடை என பதிவாளர் இயக்குனரகம் கட்டுப்பாடு விதித்ததற்கான சாதனையை புரிந்தவள்.

* திரௌபதி என்ற பெயருக்கு இயற்கையாகவே ஒரு பாசிட்டிவ் வைப்ரேஷன் உண்டு, ஏனெனில் அவளால் தான் பாரதத்தில் மகாபாரதம் நிகழ்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *