செய்திகள்

டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: ஜோகாவிச்சை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறினார் டொமினிக் தீம்

லண்டன், நவ. 22

டென்னிஸ் சாம்பியன்ஷிப் அறை இறுதி போட்டியில் உலகின் முதல் நிலை வீரரான ஜோகோவிச்சை வீழ்த்தி டொமினிக் தீம் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

உலகின் தலைசிறந்த 8 வீரர்கள் பங்கேற்றுள்ள ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இதில் நோவக் ஜோகோவிச் (செர்பியா), டொமினிக் திம் (ஆஸ்திரியா), ரபெல் நடால் (ஸ்பெயின்), டேனில் மெட்விடேவ் (ரஷியா) ஆகியோர் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றனர். இதைத் தொடர்ந்து நேற்று நடைபெற்ற அறை இறுதி போட்டியில் ‘நம்பர் ஒன்’ வீரரும், 5 முறை சாம்பியனுமான ஜோகோவிச், 3-ம் நிலை வீரர் டொமினிக் திம் நேருக்கு நேர் மோதினர்.

3வது செட்

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இருவரும் அபாரமாக ஆடினர். கடைசி கேமில் ஜோகோவிச்சின் சர்வீஸை டொமினிக் தீம் முறியடித்தார். இதன்மூலம் டொமினிக் தீம் 7- 5 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற 2-வது செட்டின் இறுதியில் இருவரும் 6- 6 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தனர். இதையடுத்து 2-வது செட் டைபிரேக்கருக்கு சென்றது. இறுதியில் ஜோகோவிச் 7- 6 என்ற கணக்கில் 2-வது செட்டை கைப்பற்ற ஆட்டம் 3-ஆவது செட்டுக்கு சென்றது. 3-வது செட்டிலும் இருவரும் அபாரமாக அதுவும் டைபிரேக்கருக்கு சென்றது. அதில் டொமினிக் தீம் 7- 6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவு அரையிறுதி போட்டியில் குரோஷியாவின் நிகோலா மெக்டிக்- நெதர்லாந்தின் வெஸ்லே கூல்ஹாப் ஜோடி 6- 3, 6- 4 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் மார்செல் கிரானோலாஸ் ஹொராஸியோ ஸெபலோஸ் ஜோடியை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேரியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *