செய்திகள்

தி.மு.க. தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும்: பா.ஜ.க. தலைவர் பேட்டி

வரும் தேர்தலில்

தி.மு.க. தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும்:

பா.ஜ.க. தலைவர் பேட்டி

சென்னை, அக்.14–

வரும் தேர்தலில் தி.மு.க. தேர்தல் அறிக்கை ஜீரோவாகத்தான் இருக்கும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

சென்னை, அடையாறில் இன்று எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

தி.மு.க.வின் முந்தையை தேர்தல் அறிக்கைகள் ஜீரோவாகத்தான் இருந்தன. இப்போதும் ஜீரோவாகத்தான் இருக்கும்.

வேளாண் திருத்தச் சட்டங்கள் மூலம் விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயன்றனர். விவசாய சங்க பிரதிநிதிகள் எல்லோரும் தெளிவாக இருக்கின்றனர். விவசாயிகளின் ஆதரவு அவர்களுக்கு இல்லை. விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர். பாரதீய ஜனதாவில் தொடர்ந்து பலர் இணைந்து வருகின்றனர்.

சமூகத்தில் ஒற்றுமை நிலவ அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். ஊராட்சியில் தலித் விவகாரத்தில் தி.மு.க. தலைவர் என்ன நடவடிக்கை எடுத்தார்? என கேள்வி எழுப்பினார்.

அண்ணா தி.மு.க. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை பாரதீய ஜனதா ஏற்றுக்கொண்டு விட்டதா என்ற கேள்விக்கு, நான் அன்றைக்கே அவரை பார்த்து வாழ்த்து சொல்லிவிட்டேன். அதற்கு என்ன அர்த்தம்? என்று முருகன் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *