செய்திகள்

தே.மு.தி.க. விலகியதால் அண்ணா தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை

234 தொகுதிகளிலும் அண்ணா தி.மு.க. வெற்றி பெறும்

தே.மு.தி.க. விலகியதால் அண்ணா தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை

அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை, மார்ச் 9–

அண்ணா தி.மு.க. கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியதால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. பாதிப்பு அவர்களுக்குத் தான் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

கூட்டணியில் இருந்து தே.மு.தி.க. விலகியது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் கூறினார்.

நாங்கள் அவர்களைப் போல் கீழ்தரமான அரசியல் செய்யமாட்டோம். பிடிக்கவில்லை என்றால் சேறு வீசக்கூடாது. நாங்கள் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிக்கிறோம். அவர்களுக்கு அரசு அங்கீகாரம் எப்படி கிடைத்தது? அம்மாவினால் தான் அவர்கள் சட்டசபைக்குள் நுழைய முடிந்தது.

இப்படி நன்றி இல்லாமல் அவர்கள் பேசுவது சரியல்ல. பக்குவப்பட்ட அரசியல்வாதி அப்படி பேசமாட்டார்கள். எதையும் அளந்து பேசவேண்டும். எங்களுக்கும் அவர்களைப் போல் பதிலடி கொடுத்து பேசத்தெரியும். ஆனால் அது முறையல்ல என்றும் அமைச்சர் கூறினார்.

கட்சியின் செல்வாக்கு, பலம், பெற்ற வாக்குகள் எல்லாம் கணக்குப் போட்டு தான் கூட்டணி கட்சிகளுக்கு சீட் கொடுக்கிறோம். ஆனால் அவர்களது எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்யமுடியும் என்றும் அமைச்சர் கூறினார்.

சுதிஷ் பேச்சு தமிழக மக்கள் சிரிக்கும் வகையில் உள்ளது. மீண்டும் அம்மாவின் ஆட்சி அமையும் என்பது அவருக்கு தெரியும். எனவே தான் அவர் வெறுப்பின் உச்சக்கட்டத்திற்கு சென்று பேசுகிறார். எந்த நேரத்திலும் நிதானம் இழக்க கூடாது. அதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *